ஹெல்மெத் ஹோல், பெர்லின் சுவர் இடிபட்டதும் எப்படி இரு நாடுகளையும் இணைப்பது என்பது குறித்த திட்டங்களை உருவாக்கி வைத்துவிட்டார். அடுத்தடுத்து அந்த திட்டத்தை மிக நேர்த்தியாக செய்து முடித்தார். குறிப்பாக இந்த இணைப்பிற்கு இரண்டாம் உலகப் போரில் வென்ற நேசப்படையினரின் ஒப்புதல் மிக அவசியம். மேலும் அதிகமான நிலப்பகுதியைக் கொண்ட ஜெர்மனி, ஐரோப்பாவை அச்சுறுத்தும் சக்தியாக மீண்டும் எழுந்து வரக் கூடும். எனவே அனைவரும் ஜெர்மானிய இணைப்பை ஆதரிக்க வேண்டிய அவசியமுமில்லை. எனவே நேசப்படையினரில் யாரேனும் ஒருவர் முட்டுக்கட்டை போட்டால் கூட இந்த இணைப்பு அமைதியாக நடக்காது. அது ஜெர்மனியின் நிலையை மிக மோசமாக்கி விடும்.
...more