இந்த பொருளாதார தேக்க நிலை சோவியத் யூனியன் எனப்படும் கூட்டமைப்பில் பல பிரச்சனைகளைக் கொண்டு வந்தன. இந்த நேரத்தில்தான் மிகேல் கோர்ப்பசேவ் எனும் தலைவர் சோவியத் ரஷ்யாவிற்கு தலைமை பொறுப்பேற்றார். கோர்ப்பசேவ் சோவியத் ரஷ்யாவின் சோஷியலிச முறையில் சீர்திருத்தம் கொண்டு வந்தால் மீண்டும் சோவியத் யூனியன் பலம் பெறும் என நம்பியவர். குறிப்பாக, அணு ஆயுதம் மற்றும் பனிப்போரைக் குறைக்கக் கூடிய பல முடிவுகளை எடுத்தார். 1989ல் வார்சாவ் உடன்படிக்கை செய்து கொண்ட நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் இனி சோவியத் யூனியன் தலையிடாது, அவரவர்கள் நாட்டின் தலைவிதியை அவர்களே எழுதிக் கொள்ளலாம் என்கிற முக்கிய மாற்றமும் வந்தது.