12ம் நூற்றாண்டில் எஸ்தோனியாவை கைப்பற்றிய ஜெர்மானிய பிரபுக்கள், மற்ற ஐரோப்பிய நிலப்பரப்பில் இருக்கும் முறை போலவே எஸ்தோனியாவிலும் நிலப்பிரபுத்துவ முறையை நுழைத்தனர். இதில் பண்ணை ஆட்களாகவும், அடிமை கூலிகளாகவும் எஸ்தோனியர்களை ஆக்கினார்கள். நிலத்தின் கூலி தொழிலாளிகள் யஸ்தோனியர்கள் எனும் நிலை 12ஆம் நுற்றாண்டு துவக்கத்திலிருந்து அடுத்த 700 ஆண்டுகள் இருந்தது. இந்த 700 ஆண்டுகளில் எஸ்தோனியா மீது டென்மார்க், ஸ்வீடன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பலமுறை படையெடுத்திருந்தாலும் எஸ்தோனிய ஜெர்மன் நிலப்பிரபுக்கள் அந்நாட்டின் மீதான தங்களின் ஆதிக்கத்தை இழக்கவே இல்லை. ஜெர்மானியர்கள் எஸ்தோனியாவை உருவாக்கினார்கள்
...more