எந்த தருணத்திலும் தலைவன், அரசன் என யாரும் தங்களை சுரண்டிவிடக் கூடாது, தங்களின் சுதந்திர வாழ்க்கைக்கு கட்டுப்பாடு விதித்திட கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இவர்கள் இருந்திருக்கிறார்களே என வியக்கவும் வைக்கிறது. சமீபத்தில் சுவிட்சர்லாந்து மக்களிடையே ‘அனைவருக்கும் மாதாமாதம் குறிப்பிட்ட தொகை பாகுபாடின்றி வழக்கப்படும், சம்மதமா?’ என கேட்டு ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ‘நீங்க ஆணிய புடுங்க வேண்டாம், இலவசமா எதுவும் தந்து எங்களை ஏமாத்த வேண்டாம்’ என ஒட்டு மொத்த நாடும் நோ சொல்லி விட்டார்கள். அதே போல நிறைய விடுமுறை நாட்கள் வேண்டுமா எனக் கேட்டதற்கும் நோ… சொல்லிவிட்டார்கள் இந்நாட்டு மக்கள். சும்மா
...more