More on this book
Community
Kindle Notes & Highlights
by
Jiang Rong
Read between
December 18, 2021 - December 4, 2024
“ஒரு வேட்டைக்காரனாக நீ முதலில் அவசியம் அறிய வேண்டிய பாடம், பொறுமை.”
வேட்டைக்கான முக்கிய சாதனம், பொறுமை.”
“கவனமாக அவதானம் செய்; நீ புரிந்துகொள்வாய்”
“பொறுமைசாலிகளுக்கே, மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி , சந்தர்ப்பங்கள் தம்மை முன்னிறுத்துகின்றன;
தனித்திருக்கும் ஒன்றை எப்போது வீழ்த்துவது என்பதை ஞானமிக்க முதிய ஓநாய்கள் நன்கறியும்.
அதிக அளவில் நிலமும் மக்களும் இருப்பதால் மட்டும் எவராலும் ஒரு யுத்தத்தை வென்றுவிட முடியாது. நீ ஒரு ஓநாயா அல்லது ஆடா என்பதைப் பொறுத்தது அது.”
ஓநாய்கள் தாக்கும்போது, அமைதியாக, கத்தலோ ஓநாய்த்தனமான ஊளைகளோ இன்றி அதை நிகழ்த்தும்.
மக்களுடைய குலச்சின்னத்தால் மட்டும்தான், அது டிராகனாக இருந்தாலும் சரி, ஓநாயாக இருந்தாலும் சரி, ஓர் இனத்துக்குரிய ஆன்மாவையும் குண நலனையும் எழுச்சி கொள்ளச் செய்ய முடியும்.
புல்லைத் தின்னும் ஜீவன்கள் இறைச்சி உண்ணும் ஜீவன்களை விட மோசமானவை.
மற்றவர்கள் நம்மை விடத் திறமைசாலிகளாக இருக்கும்போது, அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதன் மூலம் நாம் நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
ஓநாய்கள் மிகவும் பொறுமையானவை.
நம்மைத் தெரிந்து கொண்டிருப்பதைப் போல நம்முடைய எதிரியை நாம் தெரிந்து கொண்டிருந்தால் நாம் ஒருபோதும் தோற்க மாட்டோம்.
புனிதமான சுதந்திரமும், சுயநிர்ணயமும், கௌரவமுமே அவற்றின் வாழ்க்கை நோக்கம்.