More on this book
Community
Kindle Notes & Highlights
எத்தனை இரவுகளை, எத்தனை பகல்களை தான் என்ற எண்ணமின்றி வாழ்ந்திருக்கிறோம் என ஒரு மனிதன் தெரிந்து கொண்டுவிட்டால் அவன் ஒருபோதும் உலக இச்சைகளின் மீது பற்றுக் கொள்ளாதவனாக வாழத்துவங்கி விடலாம்.
ஒவ்வொரு மனிதரோடும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் இடைவெளிதான் ஒருவேளை முதுமையா?
உடல் உறுப்புகளின் வளர்ச்சியைப் போல் குணங்களுக்கும் வளர்ச்சி இருக்குமோ?
இழிவுபடுத்துகிற எல்லோருக்கும் ஒரே முகம்தான்.
படைப்பின் மற்றவை நான் உண்மைக்குத் திரையாக ஆக்கிக் கொண்டேன் படைப்பில் பல ரகசியங்கள் உள்ளன…”
ஒருமுறை ஒருவரை வெறுக்கத் துவங்கியபின் எத்தனை சமாதானங்கள் செய்தாலும் கசப்பின் சுவடுகளென்னவோ முழுமையாய் நீர்த்துப் போகாமல்தான் அப்படியேதானிருக்கிறது.
தேவைகளுக்காக இன்றி ஆசைகளுக்காக கடன் வாங்குவது மனிதனுக்குப் பழக்கமாகும்போது அதிலிருந்து விடுபடுவது எளிதாகயிருப்பதில்லை.
தோல்வியுற்று மீண்டுவரும் மனிதனுக்கு சொல்வதற்கு எத்தனையோ கதைகள் இருந்தாலும் அவன் இந்த உலகத்திற்கு சொல்ல விரும்பவதெல்லாம் ஒன்றைத்தான், நான் இன்னொருமுறை உங்கள்முன் தோற்கப்போவதில்லை.
வெறுப்பதை விடவும் ஒருவரை நேசித்தல் எளிது, தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது.
மனிதன் தன்னைத் தானே மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ளத் துவங்கும்போதுதான் பிறருக்குத் தீங்கு இழைப்பது குறித்து எண்ணாதவனாகவும் தானென்ற அகங்காரம் நீங்கியவனாகவும் இருக்கிறான்.