More on this book
Community
Kindle Notes & Highlights
கேட்டது. துறவை நாடுகிறவன் பயணிக்கலாம். ஆனால் வழிகாட்டியாகவோ பாதுகாவலனாகவோ இருக்கக் கூடாது. வாழ்வின் மீதான இச்சைதான் ஒரு மாலுமிக்கு எப்போதும் அவசியம். அந்த இச்சைதான் அவனையும் அவனோடு கப்பலில் பயணிக்கும் மற்றவர்களையும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறது.
பழைய துணிகளை உருண்டையாக்கி தைத்த தலையணையில் எண்ணை பிசுக்கேறி அழுக்காய் இருக்கும். தலை வைத்து உறங்குகையில் அழுக்கின் வாசனை நாசியில் ஏறும்.
இரண்டு உடல்கள் சேர்ந்து விலகும் சில நிமிடங்கள் வெகு சாதாரணமாக முடிந்துபோகக் கூடியது. ஆனால் எப்போதும் கூடலைப் பற்றி யோசித்து உழன்று உடலை வருத்திக் கொள்வது சாதாரணமானதில்லை.
அவளின் நினைவென்பது பற்றியெரியும் காட்டுத் தீயின் உக்கிரம், சதையும் எலும்புகளும் சமாதானமாகாத களிப்பின் திரட்சி, ஒரு வெய்யில் நாளின் நீண்ட தாகம், அவளென்பது யாதுமான பேருரு, அவளே மோகினி, அவளே காளி, அவளே சாத்தான். நரம்பின் ஒவ்வொரு துளி குருதியிலும் பொங்கிப் பெருகும் சூடு, தொண்டைக்குழியின் தவிப்பு, வியர்வையின் உப்பு, அவளென்பது உடைந்த வால் நட்சத்திரம், ஜீவராசிகளை ரட்சிக்கும் காமத்திப்பூ, அவளென்பது உடலும் சதையுமான ஒரு பெண் மட்டுமல்ல பிரபஞ்சத்தின் ஒரு துண்டு. அவனின் அவலம் ராபியிடமிருந்துதான் துவங்குகிறது. ஏனென்றால் அவன் அவள் மீது ஒருபோதும் சாத்தியப்பட வாய்ப்பில்லாத காதல் கொண்டிருந்தான்.
சொந்த ஊர்க்காரர்களிடம் மரியாதையை சம்பாதிக்க ஒரு மனிதன் வேறு ஊர்களுக்குப் பஞ்சம் பிழைக்க போகவேண்டியிருப்பதை துரதிர்ஷ்டமென்றுதான் சொல்லவேண்டும்.
துயரங்களும் வேதனைகளும் இனியொருபோதும் தன்னை அண்டாதென்கிற அவனின் நம்பிக்கைகள் எல்லாம் கண்ணீராய் வீதியில் சிதறித் தெறித்தன.
அற்புதங்களைத் தேடிச் செல்லும் மனிதர்கள் எதையும் கண்டடைவதில்லை மாறாக எல்லாவற்றையும் இழக்கிறார்கள். எல்லாவற்றையும் இழந்தபிறகும்கூட தேடிச்சென்ற அற்புதங்களை கண்டடைந்தவர்கள் சொற்பம். ஒரு சாகசம் என்பதைத் தாண்டி அற்புதங்களால் ஆகும் ஸ்தூலமான பயன் ஒன்றுமில்லை.
“என்ன எழவடி செஞ்சுருக்க. கல்யாணம் பண்ணிட்டேன்னு வந்து நிக்கிற?” தேவியின் அம்மாவுக்கு நெஞ்சையடைத்துக் கொண்டு வந்தது. “ஊருக்குள்ள நாளப்பின்ன எப்பிடி நாங்க தல நிமிர்ந்து போறது?” “ஆமா இப்ப மட்டும் பெரிய ஜமீன் பரம்பர. ஏம்மா ஆகாததா பேசற? நாமளே அன்னக்காவடிதான… என்ன பெரிய கவுரவம்,,”
யாரையும் இவ்வளவு வெறுக்காத ஜோதி. வெறுப்பு முதல்ல உன்னத்தான் சீரழிக்கும். இப்ப தேடிவந்து நம்மளப் பாத்து மரியாதையா பேசி சிரிச்சுட்டுப் போறானே இதான் அந்தாளோட நெஜம். இது புரிஞ்சுடுச்சுன்னா உனக்குள்ள இருக்க வெறுப்பு போயிரும். உன்னய
”பாதுகாப்பு முக்கியமெனில், கரையில் நில் பொக்கிஷம் வேண்டுமென்றால், கடலுக்குள் செல்.” - சூஃபி கவிஞர் சா’அதி.