More on this book
Community
Kindle Notes & Highlights
இந்த கதைக்காக நிகழ்ந்த உரையாடல்கள், வாசித்த புத்தகங்கள் சங்கடங்களோடு யாருடனாவது பழக நேர்ந்தால் அவை வெறுப்பாவதற்கு முன்னால் விலகிப் போய்விடும் பக்குவத்தை உருவாக்கியருக்கின்றன.
தனக்குப் ப்ரியப்பட்ட ஒவ்வொருவருக்கும் மனதின் அடியாழத்திலிருந்து தருவதற்கு எவ்வளவோ அவளிடம் இருந்தன.
பிரார்த்தனைகள் நிரம்பிய மனிதர்களை கவலைகள் ஒருபோதும் நெருங்குவதில்லை.
நபிகளார் சொல்வதுபோல் இறைவன் மனிதனை தன்னைப் போலவே உருவாக்கினான் என்பதுதான் இறை நம்பிக்கை நமக்குக் கற்றுத்தரும் செய்தி.
அறிந்த எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொண்ட பிறகான மனிதர்களை மனம் பிறழ்ந்தவர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்?
திடீரென ஒரு பக்கீரைப் பார்த்து அதிர்ந்தாள். அவளுடலில் ஏற்பட்ட அதிர்ச்சியில் கால்களில் ஒரு நடுக்கம் உண்டானது. தான் பார்த்தது அவனாக இருக்கக் கூடாதென மனதை சமாதானம் செய்து கொள்ள நினைத்தாலும் அவளால் உண்மையை மறுக்க முடியவில்லை. அவனேதான்.
ஜோதி – லிங்கம் எந்தப் பெயரில் அவனை இப்போது அழைப்பது?
”அவனுடைய ( மனிதன் ) பிடரி நரம்பை விடவும் நாம் ( இறைவன் ) அவனுக்கு நெருக்கமாய் இருக்கிறோம்.”
ஒவ்வொரு நிலப்பகுதியை ஒட்டிய கடலும் அந்த நிலப்பகுதியில் வாழும் மனிதர்களின் இயல்பையே பிரதிபலிக்கிறது. கடலோரத்தில் வாழும் மனிதன் எவ்வாறு கடலின் தன்மையைக் கொண்டிருக்கிறானோ கடலும் அவ்வாறு தன் கரையோரத்தில் வாழும் மனிதர்களின் இயல்பை கிரகித்துக் கொள்கிறது.