More on this book
Community
Kindle Notes & Highlights
”எங்க போனாலும் துணிச்சலா பேசணும் பழகணும்டா. அப்பதான் எதையும் கத்துக்க முடியும்.” என்றான்
அடுத்த நாள் காலையில் வீக்கம் நன்றாக குறைந்திருந்ததோடு அவனால் ஓரளவு பார்க்கவும் முடிந்தது. முகம் தெரியாத மனிதனுக்காக செய்யும் பிரார்த்தனைகளுக்குத்தான் எத்தனை வலிமை? அவனுக்கு அவளின் மீதும் கடவுளின் மீதும் ஒருசேர நம்பிக்கை வந்தது.
"சொற்கள் தான் உலகம், சொற்கள் தான் வாழ்க்கை, சொற்கள் தான் விடுதலை, சொற்கள் தான் மனித வாழ்வின் அடிப்படை ஆன்மா...
சொந்த ஊர்க்காரர்களிடம் மரியாதையை சம்பாதிக்க ஒரு மனிதன் வேறு ஊர்களுக்குப் பஞ்சம் பிழைக்க போகவேண்டியிருப்பதை துரதிர்ஷ்டமென்றுதான் சொல்லவேண்டும்.
Gopinath Ravi liked this
தன் கடந்த காலத்தைய தவறுகளிலிருந்து மீண்டு புதிய வாழ்விற்கான பாதையில் பயணிக்கத் துவங்கிய மனிதன் தனது ஒவ்வொரு தப்படிகளையும் உறுதியாக எடுத்து வைத்தான். தோல்வியுற்று மீண்டுவரும் மனிதனுக்கு சொல்வதற்கு எத்தனையோ கதைகள் இருந்தாலும் அவன் இந்த உலகத்திற்கு சொல்ல விரும்பவதெல்லாம் ஒன்றைத்தான், நான் இன்னொருமுறை உங்கள்முன் தோற்கப்போவதில்லை. அன்வர் இந்த உலகிற்கு அந்தச் செய்தியை சத்தமாய் சொல்லத் துவங்கியிருந்தான்.
”பாதுகாப்பு முக்கியமெனில், கரையில் நில் பொக்கிஷம் வேண்டுமென்றால், கடலுக்குள் செல்.” - சூஃபி கவிஞர் சா’அதி.