More on this book
Community
Kindle Notes & Highlights
அறிந்த எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொண்ட பிறகான மனிதர்களை மனம் பிறழ்ந்தவர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்?
Gopinath Ravi and 1 other person liked this
வாழ்வின் மீதான இச்சைதான் ஒரு மாலுமிக்கு எப்போதும் அவசியம். அந்த இச்சைதான் அவனையும் அவனோடு கப்பலில் பயணிக்கும் மற்றவர்களையும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறது.
Mohan Giri and 1 other person liked this
தேவையின் போது கடந்த காலத்தைய தவறுகளில் இருந்து தன்னைத் திருத்திக் கொண்டு ஒரு மனிதன் வாழ்வை நெறிப்படுத்துவதற்கு பெயர் அனுபவமென்றால், அன்வர் இப்பொழுது அனுபவசாலி.
அள்ளிக்குடிக்க முடியுமென்பதற்காக மனிதன் கடலைக் குடித்துவிடத் துடிப்பது பேதமை.
எப்படியும் தளைத்து விடவேண்டுமென்கிற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டிருக்கும் செடிகளுக்கு மழையே ஜீவநீர்.
இதில்லாமல் வாழ இயலாதென்கிற தேவைக்கும், இதற்காகத்தான் வாழ்கிறோம் என்கிற ஆசைக்கும் அப்பாற்பட்டது பேராசை. வாழ்வை கொஞ்சம் கூடுதலாய் மேம்படுத்திக் கொள்வதற்கான போராட்டத்தில் மனிதர்கள் இந்த பேராசைகளிடம்தான் ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறார்கள்.
வெறுப்பதை விடவும் ஒருவரை நேசித்தல் எளிது, தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது.
”பாதுகாப்பு முக்கியமெனில், கரையில் நில் பொக்கிஷம் வேண்டுமென்றால், கடலுக்குள் செல்.” - சூஃபி கவிஞர் சா’அதி.
கடல். கடலுக்குள் கலந்த பிறகு உபநதிகளைப் பற்றி ஒரு வார்த்தையும் தேவையில்லை.