கொடிமரத்தெரு வாசிகளில் பலரும் சிமோகாவிலிருந்து வந்தவர்கள்தான். பல வருடங்களுக்கு முன்பு இந்து மன்னர்களுக்கும் இஸ்லாமிய நவாபுகளுக்கும் நடந்த யுத்தத்தின் போது உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஏராளமானோர் அங்கிருந்து தென் தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்து வந்தார்கள். சண்டை முடிந்து திரும்பிச் சென்றுவிடலாமென நினைத்தவர்களுக்கு இந்த ஊர் பிரச்சனைகள் எதுவுமில்லாமல் அமைதியாக இருந்ததால் பிடித்துபோய் இங்கேயே தங்கிவிட்டனர். வந்தவர்கள் தங்கிவிட்டாலும் அவர்களின் சொத்துக்களும் உடமைகளும் ஏராளமாய் சிமோகாவிலிருந்தன.