எந்த ஒன்றிலிருந்தாவது விடுபட வேண்டுமென மனம் தவிக்கிற போது பிறிதொன்றின் மீதான விருப்பம் அனிச்சையாய் உருவாகி விடுகிறது. ஒரு சொல், பொருள், அல்லது மனிதர் என விருப்பங்கள் முடிவற்றவை. விருப்பங்களுக்கு எதிராக மனிதன் தொடர்ந்து போரிட்டு ஜெயிக்க விரும்புகிறான், ஆனாலும் வாழ்நாள் முழுக்க தோல்வியை மட்டுமே சந்திக்க நேரும் போராட்டம் அது.