அவனோடு படித்த யாருக்குமே செருப்பணியும் பழக்கமில்லை, செருப்பு ஆடம்பரமாகப் பார்க்கப்பட்டது. பள்ளிக்கூடத்தில் கொடுக்கும் இலவச செருப்புகள் சொல்லி வைத்தாற்போல் இரண்டு மாதங்களுக்குக் கூட உழைக்காது. இதனாலேயே பெரும்பாலான மாணவர்கள் செருப்பை பத்திரமாக வீட்டில் வைத்துவிட்டு வருவார்கள். பள்ளிக்கு அணிந்து வரும் சிலரும் வகுப்பை அடைந்ததும் பத்திரப்படுத்தும் விதமாக பைக்குள் எடுத்து வைத்துக் கொள்வார்கள். விசேஷ வீடுகளுக்குச் செல்கையிலும் பண்டிகை நாட்களுக்கு அணிவதற்கும் மட்டுமே பயன்படுத்துவார்கள்.