அறிந்த எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொண்ட பிறகான மனிதர்களை மனம் பிறழ்ந்தவர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்? அதை திறந்த நிலை உறக்கமென்று கொண்டால் அவர்கள் கனவுகளை சேமிக்கிறார்களா? பிணி குணமான மனிதர்களுக்கு பிணியுற்ற நாட்கள் குறித்த நினைவுகள் மிஞ்சியிருக்குமா?