More on this book
Community
Kindle Notes & Highlights
தன் வாழ்க்கை முழுக்க நேசத்தை மட்டுமே பகிர்ந்தளித்தவளின் தன்னடக்கத்தை பொறுத்துக் கொள்ளத்தான் அவளைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் அச்சமாய் இருந்திருக்கக் கூடும்.
பிரார்த்தனைகள் நிரம்பிய மனிதர்களை கவலைகள் ஒருபோதும் நெருங்குவதில்லை.
வெயிலோடு கட்டிப்புரண்டு தவழும் பச்சை நிறக்கொடி.
அறிந்த எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொண்ட பிறகான மனிதர்களை மனம் பிறழ்ந்தவர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்? அதை திறந்த நிலை உறக்கமென்று கொண்டால் அவர்கள் கனவுகளை சேமிக்கிறார்களா? பிணி குணமான மனிதர்களுக்கு பிணியுற்ற நாட்கள் குறித்த நினைவுகள் மிஞ்சியிருக்குமா?
ஒவ்வொரு மனிதரோடும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் இடைவெளிதான் ஒருவேளை முதுமையா? அப்படியானால் தன்னை மிஞ்சிய முதுமை அவனுக்கு எப்படி சாத்தியமானது. நாவினடியில் ஊறிய சொல் ஒரு தித்திப்பின் மணத்தோடும் கசப்பின் சுவையோடும் அவன் பெயரை உருட்டி நகர்த்தியது. - ’ஜோதி’. இப்படி நினைப்பது கூட குற்றமோ என அச்சப்பட்டவளின் மனம் தன்னை மீறி திரும்பவும் உச்சரித்த சொல்லை வாய் உலகின் செவிகளுக்கு கேட்காத ஓசையில் சொல்லி அடங்கியது.