உலக இச்சைகளில் இருந்தும், கடமைகளில் இருந்தும் துண்டித்துக் கொண்ட அலைச்சல். அவன் அவனாக இருப்பதை உதறிய நாளில் அவனொரு மரமானான், கல்லானான், செடியானான், நீர்த்துளிகளானான், மணற்துகள்களாகினான். எலும்பும் சதையும் குருதியும் பிரபஞ்சத்தோடு சேர்ந்த எல்லாமுமாகின.