கடல் உறங்குவதுமில்லை, விழிப்பதுமில்லை. பூமியின் இயக்கத்தைப் போல் ஓயாது அலைகளாகவும் குமிழ்களாகவும் தன்னை அண்டிய உயிர்களுக்குள்ளாக இயங்கியபடியே இருக்கிறது. அதற்கொரு தோற்றமுண்டு, தன்மை உண்டு. முக்கியமாய் உயிருண்டு. ஒவ்வொரு நிலப்பகுதியை ஒட்டிய கடலும் அந்த நிலப்பகுதியில் வாழும் மனிதர்களின் இயல்பையே பிரதிபலிக்கிறது.