More on this book
Community
Kindle Notes & Highlights
அறிந்த எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொண்ட பிறகான மனிதர்களை மனம் பிறழ்ந்தவர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்? அதை திறந்த நிலை உறக்கமென்று கொண்டால் அவர்கள் கனவுகளை சேமிக்கிறார்களா? பிணி குணமான மனிதர்களுக்கு பிணியுற்ற நாட்கள் குறித்த நினைவுகள் மிஞ்சியிருக்குமா? எத்தனை இரவுகளை, எத்தனை பகல்களை தான் என்ற எண்ணமின்றி வாழ்ந்திருக்கிறோம் என ஒரு மனிதன் தெரிந்து கொண்டுவிட்டால் அவன் ஒருபோதும் உலக இச்சைகளின் மீது பற்றுக் கொள்ளாதவனாக வாழத்துவங்கி விடலாம். அப்படிப் பார்த்தால் இங்கு பிணியோடு வந்து குணமாகிச் செல்லும் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் முழுமையான கருணையால் மறுபிறப்பெடுத்தவனாகவே செல்கிறான்.
கடல் உறங்குவதுமில்லை, விழிப்பதுமில்லை. பூமியின் இயக்கத்தைப் போல் ஓயாது அலைகளாகவும் குமிழ்களாகவும் தன்னை அண்டிய உயிர்களுக்குள்ளாக இயங்கியபடியே இருக்கிறது. அதற்கொரு தோற்றமுண்டு, தன்மை உண்டு. முக்கியமாய் உயிருண்டு. ஒவ்வொரு நிலப்பகுதியை ஒட்டிய கடலும் அந்த நிலப்பகுதியில் வாழும் மனிதர்களின் இயல்பையே பிரதிபலிக்கிறது.
தான் ஒரேயொரு தவறான முடிவை எடுத்தாலும் அது அந்தக் கப்பலில் உள்ள அனைவரின் உயிரையும் பறித்துவிடும் என்பதை அஹ்மத் அனுபவத்தில் உணர்ந்திருந்தான். எதிர்த்துச் சண்டையிட்டு தன்னோடு வந்தவர்களை பலி கொடுக்க விருப்பமில்லை. பொக்கிஷங்களை சம்பாதித்து விடலாம். ஆனால் ஞானிகளையும் அவர்களின் ஞானப்பொக்கிஷத்தையும் காக்க வேண்டியது தலையாய கடமை.
நிக்காஹ் என்பது ஒரு பெண்ணின் புறவயமான அடையாளத்தை வேண்டுமானால் மாற்றலாம். ஆனால் அகத்தில் அவள் எப்போதும் தனித்துவமானவளாகவே தகிக்கிறாள். பெண்களின் ஆழ் மன நாட்டங்களை, ஆளுமையைப் புரிந்து கொள்ள பெரும்பாலான ஆண்களால் முடிவதில்லை. தன்னோடு திருமண உறவிற்குள் வரும் ஒரு பெண் முழுமையாக தனக்குரியவளாய் ஆகிறாள் என்கிற ஆண்களின் அகந்தை அந்தப் பெண்களின் ஆற்றலைத் தெரிந்து கொள்ளும்போது தோற்றுப் பின் வாங்குகிறது. அறிவின் மீது பற்று கொண்டவர்கள் விளக்கைப் போன்றவர்கள். தன்னைச் சுற்றியிருக்கும் எல்லோருக்கும் ஒளியைப் பகிர்ந்தளிக்கும் குணம் அவர்களுக்கு இயல்பிலேயே வந்துவிடுகிறது. அன்பின் ஒளியை சகல ஜீவராசிகளுக்கு
...more
தோல் பொம்மை செய்வதில் விட்டல்ராவிடம் இருந்த அந்த செய்நேர்த்தி ஜோதிலிங்கத்திடமும் இருந்தது. ஆனால் அவன் அந்தத் தொழிலை செய்ய விரும்பவில்லை. சொல்லப் போனால் எந்தத் தொழிலையும் செய்ய விரும்பவில்லை. அவன் காத்திருப்பது ஒரு அற்புதம் நிகழ்வதற்காக. எல்லாக் கதைகளும் மனிதர்கள் அற்புதங்களை செய்ய வல்லவர்கள் என்பதைத்தானே அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தன. அர்ச்சுனனும், பீமனும், கிருஷ்ணனும் பாரதக் கதையில் சாத்தியமென்றால் தன் வாழ்வில் அற்புதம் நிகழக்கூடுமென எதிர்ப்பார்ப்பதும் சாத்தியம் தானே. அனுமன் வங்காள விரிகுடாவைத் தாண்டி இலங்கையிலிருந்து சீதா பிராட்டியை மீட்டு வரமுடியுமென்றால் இவனாலும் ஒரு அற்புதத்தை
...more
அன்வர் அந்த வீட்டின் கடைக்குட்டி, செல்லமாக வளர்ந்தவன். இப்பொழுது நல்ல தொழில்காரனென்பதால் எல்லோருக்கும் அவனில் விருப்பம். எல்லா ஏற்பாடுகளும் பெரிதாக இருக்கவேண்டுமென்பது அன்வர் பக்கத்து ஆட்களின் எண்ணம். ராபியா இந்த ஆடம்பரங்களை முழுதாக வெறுத்தாள். ‘எதுக்கு இவ்ளோ செலவு செய்றாங்க. ரெண்டு பேர் சேந்து வாழப் போறாங்கனு சொந்தக்காரங்களுக்கு சொல்லணும். அத செலவில்லாம செய்ய வேண்டிதான.” என உம்மாவிடம் புலம்பினாள். “செலவில்லாம செய்யனும்னா இன்னாருக்கு இன்னாரோட நிக்கா முடிஞ்சதுன்னு சொந்தக்காரங்களுக்கு எல்லாம் லெட்டர் தான் போடனும். எதையாச்சும் பெரிய மனுஷியாட்டம் பேசாம சும்மா இரு…” என உம்மா அவளை அமைதிப்
...more
அரபிக்கடலில் கப்பல்களை வேட்டையாடி பொன்னையும் பொருளையும் கவர்ந்துகொண்ட போதில்லாத நிறைவு, துறக்க நினைக்கையில் வருவதுதான் ஆச்சர்யம். எதுவுமில்லாத மனிதனுக்கு இத்தனை ஆறுதலான வாழ்வு கிடைக்குமென்றால் உலகின் வெற்றிகளைத் தேடி ஓடுகிற மனிதர்கள் எதைக் கண்டடைகிறார்கள்? துயரையும் பழிகளையும் பாவங்களையும் பொறாமைகளையும் சாபங்களையும் தவிர்த்து வெற்றிகள் தருவது ஒரு தற்காலிக களிப்பை மட்டுந்தான். அக்கணம், அச்சிறிய கணம் எளிய களிப்புகளில் திளைக்கும் மனிதர்கள் அப்படியான கணங்களை மீண்டும் மீண்டும் உருவாக்க விழைகிறார்கள்.
{அசாதாரண அனுபவம் என்பது எங்கோ வானத்திலிருந்து குதிப்பதல்ல. நம் அன்றாட வாழ்வில் சாதாரண அனுபவங்களிலேயே கிடைப்பதுதான். நாம்தான் கவனிக்கத் தவறவிடுகிறோம். அசாதாரணமானது என்பது ரொம்ப தூரமானது என்றும், சிக்கலானது என்றும் நாம் நினைக்கிறோம். அதனால் நமக்கு வெகு அருகிலேயே இருக்கும் அதைப் பார்க்கத் தவறிவிடுகிறோம்.}
‘கண்மணி எல்லோரையும் மீட்டெடுத்துக் கொடுக்கும் உன்னை என்னால் மீட்டெடுக்க முடியுமா? உன்னிலிருந்து நீங்கிய நாளிலிருந்து இன்னும் நான் அமைதியைக் கண்டடையவில்லை. எரிமலைக் குழம்பின் உலர்ந்த சாம்பலாய் உன் நினைவுகளிலிருந்து முழுமையாய் மீளமுடியாதவளாகத்தான் இப்போதும் இருக்கிறேன். எப்போதெல்லாம் ஒரு மழை பெய்கிறதோ, எப்போதெல்லாம் ஒரு விதை முளைக்கிறதோ அப்போதெல்லாம் நீயும் என்னில் புதிதாய் முளைத்துக் கொண்டேதான் இருந்தாய். பறவைகளும் போகத் துணியாத வறண்ட நிலங்களில் கூட உனக்காக அலைந்து திரிய தயாராய் இருந்தேன், ஆழ் கடலில் நீ இருக்கக் கூடுமென்றால் மொத்தக் கடலையும் நீந்திக் கடந்து உன்னை வந்து சேர்ந்துவிடும்
...more