பனி
கருப்புப் பணத்தை ஒழிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட ஒரு கதை ! இதை நான் வாசித்தேன். ரசித்தேன். ஒரு சில மிகைகள் உண்டு என்றாலும் கற்பனை மோசமில்லை ! மூன்று நண்பர்களில் ஒருவர் வேட்டை நாயை கூட வசப்படுத்தும் திறன் பெற்ற விஷயத்தை காட்டுவது அன்புக்கு என்றுமே உலகளாவிய தன்மை என்பதை காட்டுகிறது .கதையில் நான் ரசித்த சில நுண்ணிய உணர்வுகளளில் ஒன்று இது! கதையின் மையக் கருத்துக்கு வெளியே நடக்கும் சில சம்பவங்களை அழகாகக் கதையோடு கோர்த்து சில உண்மைகளைத் தெளிய வைத்துள்ள விதம் பாராட்டத்தக்கது. எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!