சிறுத்தை அடுத்து பாய்வதற்காகப் பின் நோக்கி நகர்கையில், நாய்கள் இமைக்கும் நேரத்தில் முன்னேறி அதன் குரல்வளையை மீண்டும் கவ்விப் பிடித்தன. குரல்வளையைக் காத்துக்கொள்வதற்காக சிறுத்தை உடம்பை உதறியது. நாய்களின் கடி இன்னும் இறுகியது. கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்து தாக்கலாம் என்று எண்ணிய சிறுத்தை உடம்பைத் தன் பலம்கொண்ட மட்டும் உதறியபடி, ஓடையோரம் இரண்டு அடி பின்னால் நகர்ந்தது. இரண்டாம் அடியில் பின்னங்கால்களின் பிடி நழுவ, பாய்ந்தோடும் அருவியோடு அதலபாதாளத்தில் விழுந்தது. இவையாவும் பத்து இருபது நொடிகளுக்குள் நடந்துவிட்டன. நாய்களின் உறுமல் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு குணாவும், பாண்டியும், கிருபாவும்
...more