சிவப்புப் பணம்: Sivappu Panam (Tamil Edition)
Rate it:
6%
Flag icon
பனி
Krishnamurthi Balaji
கருப்புப் பணத்தை ஒழிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட ஒரு கதை ! இதை நான் வாசித்தேன். ரசித்தேன். ஒரு சில மிகைகள் உண்டு என்றாலும் கற்பனை மோசமில்லை ! மூன்று நண்பர்களில் ஒருவர் வேட்டை நாயை கூட வசப்படுத்தும் திறன் பெற்ற விஷயத்தை காட்டுவது அன்புக்கு என்றுமே உலகளாவிய தன்மை என்பதை காட்டுகிறது .கதையில் நான் ரசித்த சில நுண்ணிய உணர்வுகளளில் ஒன்று இது! கதையின் மையக் கருத்துக்கு வெளியே நடக்கும் சில சம்பவங்களை அழகாகக் கதையோடு கோர்த்து சில உண்மைகளைத் தெளிய வைத்துள்ள விதம் பாராட்டத்தக்கது. எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
88%
Flag icon
சிறுத்தை அடுத்து பாய்வதற்காகப் பின் நோக்கி நகர்கையில், நாய்கள் இமைக்கும் நேரத்தில் முன்னேறி அதன் குரல்வளையை மீண்டும் கவ்விப் பிடித்தன. குரல்வளையைக் காத்துக்கொள்வதற்காக சிறுத்தை உடம்பை உதறியது. நாய்களின் கடி இன்னும் இறுகியது. கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்து தாக்கலாம் என்று எண்ணிய சிறுத்தை உடம்பைத் தன் பலம்கொண்ட மட்டும் உதறியபடி, ஓடையோரம் இரண்டு அடி பின்னால் நகர்ந்தது. இரண்டாம் அடியில் பின்னங்கால்களின் பிடி நழுவ, பாய்ந்தோடும் அருவியோடு அதலபாதாளத்தில் விழுந்தது. இவையாவும் பத்து இருபது நொடிகளுக்குள் நடந்துவிட்டன. நாய்களின் உறுமல் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு குணாவும், பாண்டியும், கிருபாவும் ...more
Krishnamurthi Balaji
விறுவிறுப்பான போராட்டத்தின் விளக்கம்
92%
Flag icon
நான்கு ஏக்கர் இருக்கும் அளவான தோட்டம் அது. ஆனால் செம்மண் வாகும் நீர்வரத்தும் அற்புதமான விவசாய நிலத்தின் தன்மையைக் கொண்டிருந்தன. தோட்டமெங்கும் ஆங்காங்கே பாத்தி கட்டி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, கேரட் என்று பலதரப்பட்ட வெள்ளாமை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கீழே பள்ளத்தில் தோட்டத்தின் கடைசியில் உரப்பொருட்கள் வைப்பதற்கான சிறிய வைப்பறைக்கு முன் சைக்கிள் நிற்க, பாண்டி சைக்கிளுக்கு வலப்புறமாக ஜீப்பை நிறுத்தினான். ஜீப்பின் பின்பகுதியில், கழுதைகள் சுமந்து வந்த பணம் நிறைந்த சாக்குப்பைகள் தார்ப்பாயின் அடியில் பாதுகாப்பாக இருந்தன.
Krishnamurthi Balaji
விவசாய நிலங்களில் வெள்ளாமை குறித்து அழகான விளக்கம்