More on this book
Kindle Notes & Highlights
என் தங்கையை நான் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.
குள்ளமானவர்கள் பலரிடம் சற்று வித்தியாசமான விஷயம் ஏதாவது ஒன்று இருப்பதை நான் நிறைய பார்த்திருக்றேன். சர்வாதிகாரிகள் பெரும்பாலும் குள்ளமாக இருந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
எப்போது கிரிக்கெட் சீஸன் முடிந்து பம்பர சீஸன் ஆரம்பம் என்பதை கிருஷ்ணமூர்த்தியே தீர்மானிப்பான்.
பம்பரத்தில் தலையாரி என்று ஒரு ஆட்டம் உண்டு. கொடுமை! புதிதாக ரங்க விலாசத்தில் ஒரு அணா கொடுத்து வாங்கிய என் பம்பரத்தின் புதிய வர்ணத்தைச் சேதப்படுத்திச் சொறி நாய் போல ஆணிக் குத்துகள் ஏற்படுத்தும் ஆட்டம். அவர்களுக்கு எல்லாம் கோஸ் எடுக்கச் சுலபமாக வரும். எனக்கு மட்டை அடிக்கும். அவர்களுடன் சுலபமாக விளையாடாமல் இருந்திருக்க முடியும். ஆட்டத்துக்கு வரவில்லை என்றால் என்னைப் பெண்பிள்ளை என்று சொல்வார்கள். ‘பெண்பிள்ளை’ என்கிற பட்டம் எனக்கு உலகிலேயே அவமானம் மிகுந்ததாக அப்போது தோன்றியது.