More on this book
Kindle Notes & Highlights
அய்யங்கார்களில் இரண்டு பிரிவு உண்டு. வடகலை, தென்கலை. அடைய வளைஞ்சான் பெரியார் கட்சிக்காரர்கள் ‘எச்சக்கலை’ என்று மூன்றாவதையும் சேர்த்துக்கொள்வார்கள். அய்யங்கார் என்பதே ஒருவிதமாகச் சிறுபான்மைதான். தமிழ்நாட்டில் எத்தனை அய்யங்கார்கள் இருக்கிறார்கள் என்பது பற்றி யாரும் கணக்கெடுத்ததாகத் தெரியவில்லை. டி.வி.எஸ்., இந்து குடும்பங்களின் அமைப்புகளான தனியார் துறைகளில் சில நாமங்களைப் பார்க்க முடியும். மற்றபடி அய்யங்கார்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வெளியே சிதறியிருக்கிறார்கள்.