வேறுவிதங்களில் விளையாடிக்கொண்டிருப்பதாகத்தான் படுகிறது. வாழ்க்கையே ஒரு விதத்தில் ஓர் அபாரமான கிண்டல் போலத்தான் இருக்கிறது. அதற்கும் எதுவும் நியாயமான விதிகள் இருப்பதாகத் தெரிவில்லை. அவ்வளவு கோழைத்தனமாக இருந்த என்னை எங்கேயோ உயர்த்திச் சுகமாக உட்கார வைத்திருக்கிறது. ஆனால், கிருஷ்ணமூர்த்தி? இன்று வாசலில் என்னிடம் வேலைக்கு சிபாரிசுக் கடிதத்துடன் காத்திருக்கிறான். கொடுக்கலாமா, வேண்டாமா சொல்லுங்கள்.