Kindle Notes & Highlights
by
Pa Raghavan
துணைக்கண்டத்தைவிட்டு நிரந்தரமாகப் போய்விடலாம் என்று பிரிட்டன் முடிவு செய்தபோது, ஐநூற்று அறுபத்தி ஐந்து சமஸ்தானங்களும் தன்னியல்பாக இந்திய யூனியனுடனோ, பாகிஸ்தானுடனோ இணைந்துவிடும் என்றுதான் கருதினார்கள். அது ஒரு பெரும் பிரச்னையாக இருக்க முடியாது என்றே நினைத்தார்கள். பிரச்னையாகவும் இல்லை. பிரச்னை கொடுத்த ஒரு சில சமஸ்தானங்களையும் பேசிச் சரி செய்ய முடிந்தது.
ஹிந்து, முஸ்லிம், சீக்கியர்கள், பவுத்தர்கள் என்று வேறுபாடில்லாமல் எல்லாச் சமயத்தவர் மத்தியிலும் அப்துல்லாவுக்குச் செல்வாக்கு இருந்தது. மதத்தை முன்வைக்காமல், மக்கள் பிரதிநிதித்துவத்தை முன்வைத்து காஷ்மீரில் ஒரு மக்களாட்சி அமைப்பதையே தன் லட்சியமாகப் பிரகடனப்படுத்தியவர் அப்துல்லா.

