கூடப் போதாது. ஏனென்றால், அவரது வாழ்நாளில் நூறு பேர் செய்ய வேண்டிய பணியை அவர் ஒருவராகச் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்திருக்கிறார். சிறிய வயதில் தான் படித்த விதம் குறித்து என் சரித்திரத்தில் இப்படி எழுதுகிறார்: “பள்ளிக்கூடத்தில் படித்தது தவிர வீட்டில் சூடாமணி நிகண்டு பன்னிரண்டு தொகுதிகளையும், மணவாள நாராயண சதகம், அறப்பள்ளீசுவர சதகம், குமரேச சதகம், இரத்தினசபாபதி மாலை, கோவிந்த சதகம், நீதி வெண்பா என்னும் நீதி நூல்களையும், நன்னூற் சூத்திரங்களையும் மனப்பாடம் செய்து தந்தையாரிடம் ஒப்பித்து வந்தேன்.”