Kindle Notes & Highlights
பொதுவாகவே அரசியல், கலாச்சார, தனிமனிதப் போராட்டங்கள் யாவும் தம் குறிக்கோளை அடையும்வரை அக்னியைப் போல் தகிப்பதையும், அடைந்த பிறகு தாம் முன்வைத்த மதிப்பீடுகளுக்கு எதிராகச் செயல்படுவதையும் வரலாறு நெடுகிலும் நாம் காணலாம். ரஷ்ய-சீன-கூபப் புரட்சிகளிலிருந்து தமிழ்நாட்டின் திராவிட இயக்கம் வரை நடந்த கதைதான்.
Jeyerajha (JJ) liked this
அழகிரிசாமியும் கி.ரா.வும் ஒரே ஊர்க்காரர்கள் - இடைசெவல். கி.ரா.வைப் போலவே அழகிரிசாமியின் தாய்மொழியும் தெலுங்கு.
அழகிரிசாமியின் பிரபலமான சிறுகதையான ராஜா வந்திருக்கிறார், உலகின் மிகச் சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக வரக்கூடியது. மானுட அறத்தைப் பற்றிப் பேசும் கதை அது. அதைப் படித்த பிறகு, ஒருவர் முன்பு இருந்ததைப்போலவே இருந்துவிட முடியாது.
Jeyerajha (JJ) liked this
ஜெயகாந்தன் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு வாங்கிய முன்னுரை தி.ஜ.ர.விடம் இருந்துதான்.
திரு.வி.க., தன் இறுதிநாள் வரை மற்றவர்களுக்காகவே வாழ்ந்து, தமிழகத்தின் மகாத்மா என்று அழைக்கப்பட்டார்.
இந்த அறிஞர்களின் எழுத்துக்களை, அவை எழுதப்பட்ட உடனேயே பத்திரிகையில் வெளிவந்த வடிவத்தில் காணும்போது ஏற்படும் உணர்வுகளை வார்த்தையால் எழுத முடியவில்லை. இதையெல்லாம் நம் இளைஞர்கள் பயின்றால், தமிழ் இலக்கியம் பற்றியும், சமூகம் பற்றியும் இளைய சமுதாயத்திடம் எப்பேர்ப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் என்று எண்ணி விம்மினேன்.
Jeyerajha (JJ) liked this
‘சக்தி’ கோவிந்தன், சக்தி இதழ் தவிர குழந்தைகளுக்காக அணில் என்ற வார இதழையும், பெண்களுக்காக மங்கை என்ற மாத இதழையும், சிறுகதைகளுக்காக கதைக் கடல் என்ற மாத வெளியீட்டையும், காந்தியின் எழுத்துகளை மட்டுமே மாதம் ஒரு நூலாகவும், குழந்தைகள் செய்தி என்ற இதழையும் நடத்தினார்.
’சென்னை ஆழ்வார் பேட்டையில் இன்று சங்கீத வித்வத் சபை (மியூஸிக் அகாடமி) இருக்கும் இடத்தில்தான் அன்று சக்தி காரியாலயம் இருந்தது. போர்த்துக்கீசியர் கட்டிய பிரம்மாண்டமான கட்டடம்.
பொதுவாகவே, உலக இலக்கியத்தில் எழுத்தாளர்களின் விருப்பத்துக்குரியதாக இருந்து வருவது, வாழ்வின் இருண்ட பக்கங்களே ஆகும். இல்லாவிட்டால் சாகசம்.
டால்ஸ்டாயின் புனைகதைகளில், லட்சியவாதத்தை விட வாழ்க்கைதான் தூக்கலாக இருக்கும்.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மாவாக மாற்றிய நூல்களுள் ஒன்று, டால்ஸ்டாயின் The Kingdom of God is Within You. அதேபோன்ற மாற்றத்தை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்படுத்தக்கூடிய நூல்தான், மண்ணில் தெரியுது வானம்.
நாகம்மாள் என்ற அந்த நாவல் 1942--இல் வெளிவந்தது. வட்டார வழக்கில் எழுதப்பட்ட முதல் நாவல்; குடியானவர் வாழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் ஆகிய பெருமைகளைக் கொண்டது. இதுதவிர,
(இப்போது கி.ரா. என்றால் கி.ராஜநாராயணனைக் குறிப்பது போல், முப்பதுகள் நாற்பதுகளில், கி.ரா. என்றால் மணிக்கொடியின் உதவி ஆசிரியராக இருந்த கி.ராமச்சந்திரனையே குறிக்கும்.
ஆனால் உ.வே.சா.வுக்கு ஆயிரம் பக்கங்கள்
கூடப் போதாது. ஏனென்றால், அவரது வாழ்நாளில் நூறு பேர் செய்ய வேண்டிய பணியை அவர் ஒருவராகச் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்திருக்கிறார். சிறிய வயதில் தான் படித்த விதம் குறித்து என் சரித்திரத்தில் இப்படி எழுதுகிறார்: “பள்ளிக்கூடத்தில் படித்தது தவிர வீட்டில் சூடாமணி நிகண்டு பன்னிரண்டு தொகுதிகளையும், மணவாள நாராயண சதகம், அறப்பள்ளீசுவர சதகம், குமரேச சதகம், இரத்தினசபாபதி மாலை, கோவிந்த சதகம், நீதி வெண்பா என்னும் நீதி நூல்களையும், நன்னூற் சூத்திரங்களையும் மனப்பாடம் செய்து தந்தையாரிடம் ஒப்பித்து வந்தேன்.”
உ.வே.சா.வின் இல்லத்துக்கு ரவீந்திரநாத் தாகூர் வந்திருக்கிறார்; காந்தியின் கூட்டத்துக்கு உ.வே.சா. தலைமை தாங்கிப் பேசியிருக்கிறார். உ.வே.சா.வின் பேச்சைக் கேட்ட மகாத்மா இந்த முதியவரின் பேச்சைக் கேட்டால் எனக்கே தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறதே என்று சொல்லியிருக்கிறார். காந்தியை விட 14 வயது மூத்தவர் உ.வே.சா.
ஞானிகளால் எழுத்தாளனாக முடியாது. ஏனென்றால், ஞானி மிகத் தெளிவான பதில்களோடு இருக்கிறான். அங்கே குழப்பமோ, பதற்றமோ, துயரமோ எதுவுமே இல்லை.
அடகு என்ற கதை பன்றி மேய்க்கும் மக்களைப் பற்றித் தமிழில் எழுதப்பட்ட முதல் தலித் கதையாக இருக்கலாம்.
மேல்நாட்டு இலக்கிய வடிவமான சிறுகதைக்கு இந்திய உருவம் கொடுத்தவர் ந.பிச்சமூர்த்தி என்ற க.நா.சு.வின் கூற்று முற்றிலும் உண்மை
அதேபோல் தமிழில் புதுக்கவிதையின் தந்தை என்று கருதப்படுபவரும் ந.பிச்சமூர்த்தியே ஆவார்.
“தம்பி! தேசம் என்பது என்ன? மண் பரப்பா, மரமா, கல்லா, தேசக் கொடியா? அந்நாட்டிலுள்ள மக்களின் நல்வாழ்வின் மீதும், உரிமைகளின் மீதும், மொழிவழிக் கலாச்சாரத்தின் மீதும் கருத்துச் செலுத்துவதுதான் தேச பக்தியாகும். அந்த முறையில் பார்த்தால் சாம்ராஜ்ய சக்தியும், ஆட்சி பீடத்தின் அதிகாரப் பெருக்கும் எவ்வளவு குறைகிறதோ, அவ்வளவு, ஜனங்களின் உரிமைகளும் மொழிவழிக் கலாச்சார முன்னேற்றமும் செழித்தோங்கும். தம்பி, உன்னைப் போன்ற மூடத்தனமான தேசபக்தியானது ஏகாதிபத்திய வெறியர்களையும் கொடுங்கோலையும்தான் உண்டாக்கும். யாராலும் அசைக்க முடியாத அரசாங்கம் ஒன்றை அமைக்க இடம் கொடுத்து விட்டால் மக்கள் அனைவரும் அடிமைச்
...more
Jeyerajha (JJ) liked this
மூன்றாம் குலோத்துங்கன் பற்றி ஜனநாதக் கச்சிராயன் கூறுகிறான்: “நம் மன்னர் ஆதிக்க வெறி கொண்டு அண்டை அயலிலுள்ள நாடுகள் மீதெல்லாம் வீரம் என்ற பெயரால் படையெடுப்பார். ராஜதந்திரம் என்ற பெயரால் அந்நாடுகளை முன்னறிவிப்பின்றித் தாக்குவார். அந்நாடுகளைச் சூறையாடுவார். அங்கு கொள்ளையிட்ட பொருள்களில் ஒரு சிறு பங்கை கோயில் திருப்பணிகளுக்குச் செலவிட்டுத் தெய்வீகப் புகழடைவார்! தம்பி! எதேச்சாதிகாரி எப்போதும் முகஸ்துதிப் பிரியனாகவே இருப்பான். அது தனக்கு ஆத்ம திருப்தியைத் தருவதோடு மக்களின் அதிருப்தியையும் மறைக்கும் என்றும் எண்ணுவான். வெளிநாடுகளில் நம் மன்னருக்கு எவ்வளவு பெரிய மதிப்பு, நம் ஆட்சியாளரை அரும்பெரும்
...more
“தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி. மூன்று பேரும் பல ஒற்றுமைகளை உடைய, ஒரு மையத்திலிருந்து உருவாகிப் பரந்த வெளிக்கு வந்து, மேகமாகவே பரந்த படைப்பாளிகள். இளமைக்கால நண்பர்கள். காவிரியின் மைந்தர்கள் என்றாலும் பொருந்தும். ஆற்றங்கரைக்காரர்களாகிய இவர்கள் மூவருமே ஒரு திக்காளர்கள்.”)
மார்க்கி தெ சாத் 1785--இல் எழுதிய The 120 Days of Sodom என்ற நாவலையே உலகின் முதல் ட்ரான்ஸ்கிரஸிவ் நாவல் என்று கொள்ள
வேண்டும். வில்லியம் பர்ரோஸின் நேகட் லஞ்ச், கேத்தி ஆக்கரின் Blood and Guts in High School,, ஜார்ஜ் பத்தாயின் கண்ணின் கதை ஆகியவை முக்கியமான மற்ற ட்ரான்ஸ்கிரஸிவ் நாவல்கள். இப்படி வெகு சொற்பமாக எழுதப்படும் ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்துக்குத் தமிழ் மொழியானது இரண்டு நாவல்களை அளித்திருக்கிறது என்பது பற்றி நாம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். காதுகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டால் இதை உலகமே கொண்டாடும் என்பதில் ஐயமில்லை.
Transgressive fiction என்பதன் உச்சக்கட்ட உதாரணம் காதுகள்.
தமிழில் உச்சபட்ச சாதனையைப் புரிந்த எழுத்தாளர்கள் கூட - உதாரணமாக, அசோகமித்திரன் - நவீனத்துவத்தின் சாத்திய எல்லைகளை வந்தடைந்ததோடு அவர்களின் பயணம் முடிந்து விட்டது. அந்த எல்லையைத் தாண்டியவர்கள் என ப.சிங்காரத்தையும் எம்.வி.வெங்கட்ராமையும் மட்டுமே சொல்லலாம்.