More on this book
Community
Kindle Notes & Highlights
பேருந்தோ, புகைவண்டியோ, ஜன்னல் ஓர இருக்கை என்பது இவனது தீராக் காதல்.
இவன் கடவுளாக இருந்தபோது இவனுக்குள் இருந்த சாத்தான் உரித்த பாம்புச் சட்டை.
‘காலம்’ கட்டிக் கட்டியாக உறைந்து கிடந்தது!
எமக்குத் தொழில் கவிதை
இப்படி வாழ்வதும் இன்னோர் ஆனந்தம்தான் இவனுக்கு!
‘ஒரு வியாபாரி கவிதை எழுதினால், அவனிடம் இருக்கும் காசு மட்டுமே காணாமல் போகும். ஒரு கவிஞன் வியாபாரியானால், அவனிடம் இருக்கும் கவிதையே காணாமல் போய்விடும்!’
ஒன்றைத் தொட்டு இன்னொன்று கிளை விரித்துச் செல்லும் ஒற்றையடிப் பாதைகள்தான் ஞாபகங்களோ?
“செகண்ட் கொஸ்டினைக் கேளுங்கப்பா. அத விட்டுட்டு சாக்லேட்டைக் கேக்குறீங்க?”
அந்தந்த வயதுக்கு ஏற்ற எளிய, சிறிய கனவுகள்.
கலைத்துக் கலைத்து மீண்டும் அடுக்கப்படும் சீட்டுக் கட்டுகள்தானே கனவுகள்.
அவ்வப்போது பெண்கள் கல்லூரிப் பக்கம் ஒதுங்கி, பார்வைகளால் காதலும் செய்தான்!
அவை கனவுகளோடு வாழ்கின்றன. அதனால்தான் அவற்றால் தூய்மையான காற்றைச் சுவாசிக்க முடிகிறது!”
“அய்யோ! இப்ப நான் ரெண்டு புள்ளைங்களை வளர்க்கணுமா? ஏற்கெனவே ஒண்ணு பண்ற சேட்டையே தாங்க முடியல...” என்று அலுத்துக்கொண்டாள்.
தொலைக்காட்சியில் போகோ சேனலை வைத்துவிட்டு,
“பார்த்துட்டு இருங்க. எனக்கு கிச்சன்ல நெறைய வேலை இருக்கு”
பெற்றவன் கடனை அறியாமல் பெருங்கனவுகளில் மிதந்து அலைந்த காலம் அது.
புறாக்கூண்டு ஒன்று காலியாக இருந்தாலும்’ சின்னதாகப் படுக்கையை விரித்து வாடகைக்கு விட்டு விடுவார்கள்.
வேலையற்றவனின் பகலும், நோயாளியின் இரவும் நீளமானவை
வேலை இல்லாதவனின் பகலைச் சுட்டெரிக்கும் வெயில், இவன் வானத்தில் தினமும் எரிந்துகொண்டேயிருந்தது. புத்தகங்களின் நிழலில் ஒதுங்குவது மட்டுமே இவனுக்கு ஆறுதலை அளித்தது.
இப்போது யோசிக்கையில் அது மிகவும் நல்ல காலம்.
அகிரா குரோசோவா,
ஆர்ம்ஸ்ட்ராங் செல்வதற்கு முன்பே, நிலவில் வடை சுட்ட பாட்டியின் முதல் வடையை வாங்கியவன். பச்சையப்பாஸ் ஸ்டூடன்ட்தான் என்ற கர்வம், பச்சையப்பன் மாணவர்களுக்கு உண்டு.
தோல்விகளைத் துரத்தும் தன்னம்பிக்கையை,
“உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!” -சாக்ரடீஸ்
புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன் என்னிடம் இருந்து பறிக்கிறான் பூனை வளர்க்கும் சுதந்திரம்.
ஊர் கும்பகோணத்துக்குப் பக்கத்தில் இருக்கும் அபிவிருத்தீஸ்வரம்.
வெட்டாற்றங்கரையில்
மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது.
இருப்பதற்காக வருகிறோம் இல்லாமல் போகிறோம்
பேப்பரையும் பேனாவையும் ஒதுக்கிவிட்டு, கடவுளின் கால்களை அமுக்கப்போனான்.
உண்மையில் ஆண்களின் கண்ணீரும் உயர்வானது. அது பெண்களுக்காகச் சிந்தப்படும் எனில், அதி உயர்வானது.
‘சமர்ப்பணம், புத்தகம் வெளியிட முடியாமல் தவிக்கும் சக கவிஞர்களுக்கு...’
ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!
மதிய நேரத்துக் கடல் மதிய நேரத்து கடல் போலவே இருந்தது.