More on this book
Community
Kindle Notes & Highlights
என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்
அவன், குதிகாலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கார்ந்தாலும் பசித்தது!’ ‘வெயிலோடு போய்’ சிறுகதைத் தொகுப்பில்... - ச.தமிழ்ச்செல்வன்
‘விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்குவதில்லை’
ஒன்றைத் தொட்டு இன்னொன்று கிளை விரித்துச் செல்லும் ஒற்றையடிப் பாதைகள்தான் ஞாபகங்களோ?
கலைத்துக் கலைத்து மீண்டும் அடுக்கப்படும் சீட்டுக் கட்டுகள்தானே கனவுகள்.
சூரியனைத் தள்ளி நின்று காதலிக்கும், சூரியகாந்தியைப் போல,
“உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!”
எப்போது கடற்கரைக்குச் சென்றாலும் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் சென்றதே இல்லை. அலைகளிடம் பயம் இல்லை பயம் அப்பாவிடம்தான்!