இவன் என்னமோ பெரிய வீரன் மாதிரி, ‘இது நம்மள மேல தூக்கிட்டுப் போற ஒரு மெஷின். அவ்வளவுதான். இதைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்’ என்று முதல் படிக்கட்டில் காலை எப்படி வைப்பது, கடைசி படிக்கட்டில் இருந்து காலை எப்படி எடுப்பது என்று பாடம் நடத்துவான். எஸ்கலேட்டரில் கால் வைத்ததுமே, தோளோடு சேர்த்து மனைவியைப் பிடித்துக் கொள்வான். தன் பாதுகாப்புக்காகத்தான் கணவன், தோள் சாய்த்துக் கொள்கிறான் என்று மனைவி நினைத்தாலும், இவனுக்குள் இருக்கும் அச்சத்தால்தான் அவளைப் பிடித்துக்கொள்கிறான் என்று இன்று வரை அவளுக்குத் தெரியாது. காட்டு மிராண்டிக்கு ஏற்ற காட்டுச்சி!