மாநகரத்துக்கு வந்த புதிதில், உயரமான கட்டடங்களுக்குள் நுழையும் போதெல்லாம், இவன் பழைய பயத்துடன் லிஃப்டடைப் புறக்கணித்து கால்களாலேயே அந்த உயரங்களைத் தாண்டியிருக்கிறான். இவன் இப்படியென்றால், இவன் மனைவிக்கு எஸ்கலேட்டரைக் கண்டால் பயம். சேலையின் கால் பகுதி படிக்கட்டில் மாட்டிக் கொண்டால் என்னாவது? எஸ்கலேட்டரில் கால் வைக்கும் போது தலைகீழாக விழுந்து விடுவேனா..? எனப் பல சந்தேகங்கள் கேட்டு இவன் அச்சத் தீயில் நெய் ஊற்றுவாள்.