அப்படி ஒரு வனத்தின் சந்திப்பில் இவன் ஒரு கவிதையைப் படித்தான். எல்லோரும் சிறப்பாக இருக்கிறது என்று கருத்துத் தெரிவிக்க, தாடி வைத்த ஒர் இளைஞன் மட்டும், “இந்தக் கவிதை எனக்குப் புடிக்கல’ என்று அதற்கான காரணங்களை விளக்கிக்கொண்டிருந்தான். அந்த இளைஞன் கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவன் என்று இவன் பின்னர் அறிந்துகொண்டான். அடுத்த வார ‘வனம்’ சந்திப்பில், இவன் மீண்டும் ஒரு கவிதையைப் படித்தான். நான் ஏன் நல்லவனில்லை என்பதற்கான மூன்று குறிப்புகள். ஒன்று நான் கவிதை எழுதுகிறேன். இரண்டு அதைக் கிழிக்காமல் இருக்கிறேன். மூன்று உங்களிடம் படிக்கக் கொடுக்கிறேன்!’ -என்று படித்து முடித்ததும்,
அப்படி ஒரு வனத்தின் சந்திப்பில் இவன் ஒரு கவிதையைப் படித்தான். எல்லோரும் சிறப்பாக இருக்கிறது என்று கருத்துத் தெரிவிக்க, தாடி வைத்த ஒர் இளைஞன் மட்டும், “இந்தக் கவிதை எனக்குப் புடிக்கல’ என்று அதற்கான காரணங்களை விளக்கிக்கொண்டிருந்தான். அந்த இளைஞன் கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவன் என்று இவன் பின்னர் அறிந்துகொண்டான். அடுத்த வார ‘வனம்’ சந்திப்பில், இவன் மீண்டும் ஒரு கவிதையைப் படித்தான். நான் ஏன் நல்லவனில்லை என்பதற்கான மூன்று குறிப்புகள். ஒன்று நான் கவிதை எழுதுகிறேன். இரண்டு அதைக் கிழிக்காமல் இருக்கிறேன். மூன்று உங்களிடம் படிக்கக் கொடுக்கிறேன்!’ -என்று படித்து முடித்ததும், எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். ஒருசிலர் “இந்தக் கவிதை என்ன சொல்கிறது என்று புரியவில்லை” என்றார்கள். அப்போது இவன் சென்ற வாரம் பார்த்த தாடி வைத்த இளைஞன் பேசத் தொடங்கினான். “இந்தக் கவிதை தமிழில் எழுதப்பட்ட ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்று” என்று அதற்கான விளக்கத்தை அவன் விளக்கிக்கொண்டிருந்தான். ‘வனம்’ முடிந்ததும், இவன் அவனிடம் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டான். அந்த நண்பன், இவனை தன் விடுதி அறைக்கு அழைத்துச் சென்றான். இவனைப் போலவே அவனது அறையும் புத்தகங்களால் நிரம்பியிருப்பது கண்டு, இவனுக்கு அவன் மேல் மதிப்பு கூடியது. அடுத்தடுத்த வனத்தின் சந்திப்புகளில், அந்த நட்பு வலுப்பெற்றது. வெள்ளி மாலை ‘வனம்’ முடிந்து, சனி... ஞாயிறு என அவன் அறையிலேயே இவன் தங்கத் தொடங்கினான். கவிதைகளும் ரஷ்ய இலக்கியமுமாகக் கழிந்த பொழுதுகள் அவை. அவன் பின்னாட்களில் தங்கர் பச்சானிடமும், இந்தி இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷியிடமும், பாலு மகேந்திராவிடமும் பணியாற்றி, ‘கற்றது தமிழ்', ‘தங்க மீன்கள் என்று இரண்டு படைப்புகளை உலக சினிமாவுக்க...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.