More on this book
Community
Kindle Notes & Highlights
“உன்னை மாதிரிதான்டா அப்பாவும் தினமும் ஸ்கூலுக்குப் போறேன்.” மகன் ஆச்சர்யத்துடன், “அப்படியா! உங்க மிஸ் பேரு என்ன?” “என் மிஸ் பேரு இருக்கட்டும். உங்க மிஸ் பேரு என்ன?'' “பானு மிஸ்.” “அப்ப எங்க மிஸ் பேரு வேணு மிஸ்.” “வேணு மிஸ் எப்படி இருப்பாங்க?” “முதல்ல உங்க பானு மிஸ் எப்படி இருப்பாங்கனு சொல்லு.” “நல்லா அழகா இருப்பாங்க! கலர் கலரா சேலை கட்டிட்டு வருவாங்க. மழை பேஞ்சா தானே குடை பிடிப்பாங்க? எங்க பானு மிஸ், மழை இல்லேன்னாலும் டெய்லி குடை பிடிச்சுட்டு வருவாங்க.” “நல்ல மிஸ்ஸா இருக்காங்களே...” “நல்ல மிஸ்தான்ப்பா. ஆனா, டெய்லி டெய்லி படிக்கச் சொல்வாங்க. ஹோம்வொர்க் எழுதச் சொல்வாங்க.'' “நல்ல விஷயம்தானப்பா...
...more
உன் கவிதையை நீ எழுது எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும் தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால் ஒன்று செய் உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று என்னைக் கேட்காமலேனும் இரு”
பேருந்தோ, புகைவண்டியோ, ஜன்னல் ஓர இருக்கை என்பது இவனது தீராக் காதல். ஆனால், தொண்ணூறு சதவிகிதப் பயணங்களில் வேறு யாரோ அங்கு அமர்ந்து, வண்டி கிளம்பியதுமே தூங்கி வழிந்துகொண்டிருப்பார். பார்ப்பதற்கு நிறையக் காட்சிகளும், படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்களும், பழகுவதற்கும் பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும், இந்த ஜன்னல் ஓரத்து இருக்கையிலேயே வசித்துவிட இவனுக்குச் சம்மதம்.
மாநகரத்துக்கு வந்த புதிதில், உயரமான கட்டடங்களுக்குள் நுழையும் போதெல்லாம், இவன் பழைய பயத்துடன் லிஃப்டடைப் புறக்கணித்து கால்களாலேயே அந்த உயரங்களைத் தாண்டியிருக்கிறான். இவன் இப்படியென்றால், இவன் மனைவிக்கு எஸ்கலேட்டரைக் கண்டால் பயம். சேலையின் கால் பகுதி படிக்கட்டில் மாட்டிக் கொண்டால் என்னாவது? எஸ்கலேட்டரில் கால் வைக்கும் போது தலைகீழாக விழுந்து விடுவேனா..? எனப் பல சந்தேகங்கள் கேட்டு இவன் அச்சத் தீயில் நெய் ஊற்றுவாள்.
இவன் என்னமோ பெரிய வீரன் மாதிரி, ‘இது நம்மள மேல தூக்கிட்டுப் போற ஒரு மெஷின். அவ்வளவுதான். இதைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்’ என்று முதல் படிக்கட்டில் காலை எப்படி வைப்பது, கடைசி படிக்கட்டில் இருந்து காலை எப்படி எடுப்பது என்று பாடம் நடத்துவான். எஸ்கலேட்டரில் கால் வைத்ததுமே, தோளோடு சேர்த்து மனைவியைப் பிடித்துக் கொள்வான். தன் பாதுகாப்புக்காகத்தான் கணவன், தோள் சாய்த்துக் கொள்கிறான் என்று மனைவி நினைத்தாலும், இவனுக்குள் இருக்கும் அச்சத்தால்தான் அவளைப் பிடித்துக்கொள்கிறான் என்று இன்று வரை அவளுக்குத் தெரியாது. காட்டு மிராண்டிக்கு ஏற்ற காட்டுச்சி!
வாழ்ந்து கெட்ட வீடுகளில் இருந்து ஒரு வலி, மெள்ளக் கசிந்து காற்றில் பரவி நிலையற்று அலைவதை எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? கிராமத்தில் வாழ்ந்த சொந்த வீட்டை பூனைகள் உறங்கவும், அரசமரச் செடிகள் சுவர் வழி வேர்விட்டு, வெடித்து கிளம்ப கரைய அனுமதித்துவிட்டு மாநகரத்து வீதிகளில் பசியுடன் அலையும் கண்கள் நடுநிசியில் வந்து உங்களை அலைக்கழித்ததுண்டா? கதவு, ஜன்னல், பாத்திரங்கள்... போன்றவற்றை விற்ற பின்பு, கையிருப்புக் கரையக் கரைய மாநகரத்து சிக்னல் கம்பங்களுக்கு அருகே சிகப்பு விளக்கு விழும் வரை காத்திருந்து ஒடிவந்து வாகனங்களுக்கு இடையே நுழைந்து கார் துடைக்கும் துணியும், ஆங்கில ரைம்ஸ் புத்தகமும் விற்பவர்களில்
...more
வேலையற்றவனின் பகலும், நோயாளியின் இரவும் நீளமானவை என்பதை இவன் உணர்ந்த காலம் அது.
அப்படி ஒரு வனத்தின் சந்திப்பில் இவன் ஒரு கவிதையைப் படித்தான். எல்லோரும் சிறப்பாக இருக்கிறது என்று கருத்துத் தெரிவிக்க, தாடி வைத்த ஒர் இளைஞன் மட்டும், “இந்தக் கவிதை எனக்குப் புடிக்கல’ என்று அதற்கான காரணங்களை விளக்கிக்கொண்டிருந்தான். அந்த இளைஞன் கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவன் என்று இவன் பின்னர் அறிந்துகொண்டான். அடுத்த வார ‘வனம்’ சந்திப்பில், இவன் மீண்டும் ஒரு கவிதையைப் படித்தான். நான் ஏன் நல்லவனில்லை என்பதற்கான மூன்று குறிப்புகள். ஒன்று நான் கவிதை எழுதுகிறேன். இரண்டு அதைக் கிழிக்காமல் இருக்கிறேன். மூன்று உங்களிடம் படிக்கக் கொடுக்கிறேன்!’ -என்று படித்து முடித்ததும்,
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
“ஏய் இக்பால்! சாகும் வரை உன் பிணத்தை நீதான் சுமக்க வேண்டும்” என்ற உருதுக் கவிஞன் இக்பால் வரிகளில் மூழ்கி இவன் மேலும் குழம்பினான்.
பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்குத் தெரியும். தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும், சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!