More on this book
Community
Kindle Notes & Highlights
1. உ.வே.சா. எழுதிய ‘என் சரித்திரம்’ 2. பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ 3. மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ 4. லியோ டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ 5. தஸ்தாவஸ்கியின் ‘குற்றமும் தண்டணையும்’ 6. ‘உலகம் சுற்றிய தமிழர்’ ஏ.கே. செட்டியாரின் ‘பயணக் கட்டுரைகள்’ 7. ஜான் ரீட் எழுதிய ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ 8. சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்த ‘ஏழை படும் பாடு’ 9. ராபின்சன் குருசோவின் ‘தன் வரலாறு’ 10. ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’
“நல்ல விஷயம்தானப்பா... நீங்களும் நெறைய புக்ஸ் படிங்க. உங்க கடனை எல்லாம் நான் அடைக்கிறேன்!”
அது பள்ளிக்குச் சொந்தமான மாட்டுவண்டி.
சமூகம் என்பது நான்கு பேர்.
“இந்தக் காட்சியை நீ தள்ளியிருந்து வேடிக்கை பார்க்கத்தான் முடியும். நீ சொல்றது அவனுக்குக் கேட்காது. அப்புறம் இன்னொரு விஷயம்... இது ஏற்கெனவே போடப்பட்ட இருப்புப் பாதை. இங்க யாரோட மரணத்தையும் யாராலயும் தடுக்க முடியாது. வா, அடுத்த பெட்டிக்குப் போகலாம்!” என்றார்.
அந்தப் பயிற்சி முகாமில்தான் இவன், கவிஞர் மு.சுயம்புலிங்கத்தைச் சந்தித்தான். ‘நாட்டுப் பூக்கள்', ‘ஊர்க் கூட்டம்’ என்னும் தலைப்பிலான கவிதைத் தொகுப்புகளுக்கு சொந்தக்காரர். கரிசல்காட்டு இலக்கியத்தில் கி.ரா- வுக்குப் பிறகு குறிப்பிடத்தகுந்தவர்.
“கவலைப்படாத. காசுங்கிறது காகிதம் மாதிரி. வரும்... போகும். இதையெல்லாம் ஒரு அனுபவமா எடுத்துக்கோ.”
‘ஒரு வியாபாரி கவிதை எழுதினால், அவனிடம் இருக்கும் காசு மட்டுமே காணாமல் போகும். ஒரு கவிஞன் வியாபாரியானால், அவனிடம் இருக்கும் கவிதையே காணாமல் போய்விடும்!’
“கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!”
இறந்துகிடந்த அந்தக் குழந்தையின் கண்களை சந்தித்த போது, இவன் அதிர்ச்சியைச் சந்தித்தான்; இந்த உலகின் மீதான அவநம்பிக்கையைச் சந்தித்தான்; அதை சாத்தியப் படுத்தும் மரணத்தைச் சந்தித்தான்; இவன் கேள்வி கேட்க நினைத்த கடவுளைச் சந்தித்தான்; சுற்றிலும் சாக்கடை நீர் பெருகிக்கிடக்க, அவற்றில் எருமைகளையும் பன்றிகளையும் அவற்றின் வால்களில் மொய்த்துக்கொண்டிருக்கும் கொசுக்களையும் சந்தித்தான்; இதை ஏதும் கண்டுகொள்ளாமல், தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் சமூகத்தைச் சந்தித்தான். அன்றிலிருந்து இவன், கற்ற புகைப்படக் கலை இவனிடம் இருந்து விலகிப்போனது. இப்போதெல்லாம் இலக்கிய நிகழ்ச்சிகளிலோ திரைப்பட விழாக்களிலோ இவனைப் படம்
...more
“வாழ்க்கையின் கேள்விகள் கடினமாக இருக்கலாம். ஆனால், விடைகள் எளிமையாகத்தான் இருக்கின்றன!'’ - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
“மடையா... உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இந்த உலகத்துல மனுஷங்க யாரும் சாகறதே இல்ல. காலம்தான் செத்துப்போகுது. நீ இருக்கிற வரைக்கும் நான் உயிரோட தான் இருப்பேன். அப்புறம் நீயும் நானும் உன் பையனா, பேரனா வாழ்ந்திட்டு இருப்போம். ஜனனமும் மரணமும் முடிவே இல்லாத ஒரு தொடர்ச்சிடா.. புரியுதா?'’
எல்லாப் பிள்ளைகளையும் போலவே பத்தே நிமிடங்களில் டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டு போரடித்து, மகன் இவனை செஸ் விளையாடக் கூப்பிட்டான்.
“வாழ்க்கைங்கிறது என்ன?” என்று கேட்டார் கடவுள். இவன் மீண்டும் பதற்றத்துடன் விழித்துக்கொண்டிருக்க, கடவுள் சொன்னார்: “வாழ்க்கைங்கிறது இந்த மாதிரி அப்பனும் புள்ளையும் விளையாடற தீராத விளையாட்டு!'’
திரையுலகைப் பற்றி எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலான அசோகமித்திரன் எழுதிய ‘கரைந்த நிழல்கள்'.
“உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற எல்லா சுதந்திரமும் உனக்கு இருக்கு. பின்னாட்கள்ல அதற்கான சந்தோஷத்தையும் துக்கத்தையும் அனுபவிக்கும்போது மட்டும், என்னை நினைச்சுப் பார்த்துக்கோ. அதுக்கு முன்னாடி ஒரு புத்தகம் தர்றேன். அதை முழுசாப் படி. அப்புறம் முடிவு எடு” என்று சொல்லிவிட்டு புத்தக அலமாரிகளில் தேடித் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகத்தை இவனிடம் கொடுத்தார். அது நடிகர் சிவகுமார் எழுதிய ‘இது ராஜபாட்டை அல்ல’ என்ற புத்தகம்.
“கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுகளோடு வாழ்கின்றன. அதனால்தான் அவற்றால் தூய்மையான காற்றைச் சுவாசிக்க முடிகிறது!” - ஹிராகி முராகோமி, ஜப்பானிய எழுத்தாளர்.
“சமீபத்துல காஃப்காவோட புக் ஏதாச்சும் படிச்சீங்களா?” என்றார். “ஆமா சார். அவரோட புக் படிச்சு ரொம்ப நாளேச்சுனு அவரு எழுதின ‘உருமாற்றம்’ நாவலைப் படிச்சேன்” என்றான்.
அந்தப் பருவத்தில்தான் இவன் எல்லாக் குழந்தைகளையும் போலவே கடவுளாக இருந்தான்.
“நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!” - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலிலிருந்து)
தஞ்சை மண்தான் எத்தனை எத்தனை எழுத்தாளர்களைத் தந்திருக்கிறது. தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, தஞ்சை ப்ரகாஷ்... என எழுத்தாளர்கள் விளைந்த மண் அது.
எழுத்தாளர், பத்திரிகையாளர் மாலன் எழுதிய ‘ஆயுதம்’ என்ற சிறுகதைதான் இவன் ஞாபகத்துக்கு வந்தது. ஒவ்வொரு பத்திரிகையாளனும் படிக்கவேண்டிய கதை அது.
மரணம், ஒரு மோசமான சதுரங்கம். எத்தனை பேர் சுற்றி நின்று பாதுகாத்தபோதிலும், அது எங்கள் பிரியத்துக்குரிய அரசனை அழைத்துச் சென்றுவிட்டது.
இப்போதுகூட நீங்கள் வானத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
“உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!” -சாக்ரடீஸ்
இப்படித்தான் இவன் வடுவூர் துரைசாமி ஐயங்காருடன் துப்பறிந்தான். தமிழ்வாணனின் சங்கர்லாலைச் சந்தித்தான். தேவனின் சாம்புவுடன் உலா போனான். சுஜாதாவின் கணேஷ்-வசந்த் கை பிடித்தான். புஷ்பா தங்கதுரையின் சிங்குடன் சிநேகமானான். ராஜேஷ்குமாரின் விவேக், ரூபலாவின் ரசிகன் ஆனான். சுபாவின் நரேன், வைஜயந்தியின் வழித்தடங்களைத் தொடர்ந்தான். அந்த வாசிப்பு அனுபவம்தான் இவனை பரத்-சுசிலாவுடன் பி.கே.பி.யிடம் பணியாற்ற வைத்தது.
வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். -எழுத்தாளர் வண்ணநிலவன்
இருப்பதற்காக வருகிறோம் இல்லாமல் போகிறோம் -என்று எழுத்தாளர் நகுலன்
‘சிறகில் இருந்து பிரிந்த இறகு ஒன்று, காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது’ என்று ஈழத் தமிழ்க் கவிஞன் பிரமிள் எழுதியதும் நினைவுக்கு வந்தது.
“ஏய் இக்பால்! சாகும் வரை உன் பிணத்தை நீதான் சுமக்க வேண்டும்” என்ற உருதுக் கவிஞன் இக்பால் வரிகளில் மூழ்கி இவன் மேலும் குழம்பினான்.
பிம்பம் என்பது என்ன? அது நினைவுகளின் நிழற்கூடு.
எழுத்தாளர் அம்பை மொழிபெயர்த்த ‘சந்தால்’ பழங்குடி இனப்பெண் எழுதிய கவிதை அது. அந்தக் கவிதையில் ஒரு பெண் தனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று தன் தகப்பனிடம் சொல்கிறாள்: அப்பா, உன் ஆடுகளை விற்றுத்தான் நீ என்னைப் பார்க்க வர முடியும் என்ற தொலைதூரத்தில் என்னைக் கட்டிவைக்காதே! மனிதர்கள் வாழாமல் கடவுள்கள் மட்டும் வாழும் இடத்தில் மணம் ஏற்பாடு செய்யாதே!
காடுகள் ஆறுகள் மலைகள் இல்லா ஊரில் செய்யாதே என் திருமணத்தை! நிச்சயமாக எண்ணங்களைவிட வேகமாய் கார்கள் பறக்கும் இடத்தில் உயர் கட்டடங்களும் பெரிய கடைகளும் உள்ள இடத்தில் வேண்டாம்! கோழி கூவி பொழுது புலராத முற்றமில்லாத வீட்டில் கொல்லைப்புறத்திலிருந்து சூரியன் மலைகளில் அஸ்தமிப்பதைப் பார்க்க முடியாத வீட்டில் மாப்பிள்ளை பார்க்காதே! இதுவரை ஒரு மரம்கூட நடாத, பயிர் ஊன்றாத, மற்றவர்களின் சுமையைத் தூக்காத, ‘கை’ என்ற வார்த்தையைக்கூட எழுதத் தெரியாதவன் கையில் என்னை ஒப்படைக்காதே! எனக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் நீ காலையில் வந்து அஸ்தமன நேரத்தில் நடந்தே திரும்பக்கூடிய இடத்தில் செய்து வை! இங்கே நான்
...more
‘மக்களுக்குப் புரியாத வகையில் இலக்கியம் செய்கிறவன், அந்தப் படைப்பை திரைச்சீலை போர்த்தி மூடிவிடுகிறான். இயற்கை, மக்களுக்குத் தேவையான அனைத்தையும் எளிமையாகவே படைத்திருக்கிறது. மண் எளிது: விண் எளிது: காற்று எளிது: தீ எளிது!’ என்னும் மகாகவி பாரதியாரின் வார்த்தைகள்தான் இன்று வரை இவன் பாடல்களின் தாரக மந்திரம்.
பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்குத் தெரியும். தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும், சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!