Kindle Notes & Highlights
Read between
January 11 - January 16, 2022
நரோடா பாட்டியா என்ற இடத்தில் 28 பிப்ரவரி 2002 அன்று, ஒரே இடத்தில் ஐயாயிரம் பேர் அடங்கிய பஜ்ரங் தள் அமைப்பின் கூட்டத்தால் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அதில் பலர் உயிரோடு எரிக்கப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள், அங்கே இருந்த ஒரு கிணற்றுக்குள் தள்ளப்பட்டன. அதில் கிடந்த சடலங்கள் 36 பெண்கள், 35 குழந்தைகள், 26 ஆண்கள்.
மோடி பெருமையோடு திறந்து வைத்த சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்காக, 70 ஆதிவாசி கிராமங்கள் அழிக்கப்பட்டன. 75 ஆயிரம் ஆதிவாசிகள் தாங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து ஒரு சிலைக்காக இடம் பெயர்க்கப்பட்டனர்.
‘வழக்கின் ஆவணங்களை பரிசீலிக்கையில், பான்டியாவின் கொலை வழக்கு விசாரணை, வேண்டுமென்றே சிக்கலாக்கப்பட்டு ஒழுங்காக விசாரிக்கப்படவில்லை என்பதை உணர்த்துகிறது. இவ்வழக்கின் புலனாய்வு அதிகாரிகள், தங்களின் தவறான புலனாய்வால், அநீதி இழைத்துள்ளனர். பலரின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் வரிப் பணம் மற்றும் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டனர்.