மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் – நம்மிடையே ஆழப்பதிந்திருக்கும் வேசிகள் குறித்த கோபமும், வெறுப்பும் எவ்வளவு தூரம் நியாயமானது, எத்தனை சதவிகிதம் நிஜமானது. யோசித்துப்பார்த்தால் வேசி என தனித்து ஓரினமும் கிடையாது. நாம் ஒவ்வொருவருமே ஏதாவதொரு கணத்தில் விபச்சாரியாக நடந்து கொள்கிறோம் – மனதாலும் உடலாலும்.