இரு உறுப்புக்களின் சில நிமிட உராய்வு எப்படி ஒருத்தியின் ஒழுக்கவியல் அந்தஸ்தைத் தீர்மானிக்கிறது என்பதை நினைக்க நினைக்க ஆச்சரியத்தின் சுகந்தமே தேங்கி நிற்கிறது. ஆந்த்ரபோலஜியின் அடிப்படையில் பார்த்தால், இன்னாரை இன்னார் மட்டுமே புணரலாம் என்கிற ஆதாரக் கோட்பாட்டுடன் நாகரிக மனிதன் தொடங்கி வைத்த நமது பாரம்பரிய குடும்ப அமைப்பு முறை தான் முதல் வேசி ஜனிக்கக் காரணமாய் இருந்திருக்கக் கூடிய ஆணி வேர் எனத் தோன்றுகிறது.