நளினி ஜமீலா தனது ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை நூலில் சொல்வது போல் – “இங்கே விற்பனை செய்யப்படுவது அன்போ, காதலோ அல்ல. ஒரு நபருடன் குறிப்பிட்ட நேரத்தைச்செலவிட ஒரு சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான அப்போதைய மன அமைதியையும் பரிவையும் அளிக்கிறோம். இதை விற்பனை செய்யக் கூடாது என்று சொல்வதை விட தேவைப்படாதவர்கள் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்து கொள்வது தான் நல்லது”. இது மிக முக்கிய, முதிர்ச்சி வழி வந்த ஒரு நிலைப்பாடு.