இப்பவும்கூட ஆண் பிள்ளைத் துணைக்கு ஆசைப்பட்டோ, அவன் மேலே காதல் உருவாகியோ நான் அவனைத் தேடலே. ஒரு காரியமா அவன் இப்போ எனக்கு ஒரு அவசியத் தேவை. என்னாலே எந்த ஆணையும் இனிமே நேசிக்க முடியாது. எந்த ஆணைப் பத்தியும் 'அவன் ஒரு ஆண்'கிற பார்வையிலே எனக்கு உயர்வாத் தோணாது. ஒரு ஆண் பிள்ளையின் ஸ்பரிசத்தையும் நெருக்கத்தையும் நெனைக்கறபோதே அடி வயத்தைக் குமட்டிண்டு வரது.
Ashok Krishna liked this