More on this book
Community
Kindle Notes & Highlights
by
Jayakanthan
Read between
January 10 - February 11, 2022
வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை.
Anuradha and 1 other person liked this

· Flag
Anuradha
· Flag
Aishwarya Srinivasan
இப்பவும்கூட ஆண் பிள்ளைத் துணைக்கு ஆசைப்பட்டோ, அவன் மேலே காதல் உருவாகியோ நான் அவனைத் தேடலே. ஒரு காரியமா அவன் இப்போ எனக்கு ஒரு அவசியத் தேவை. என்னாலே எந்த ஆணையும் இனிமே நேசிக்க முடியாது. எந்த ஆணைப் பத்தியும் 'அவன் ஒரு ஆண்'கிற பார்வையிலே எனக்கு உயர்வாத் தோணாது. ஒரு ஆண் பிள்ளையின் ஸ்பரிசத்தையும் நெருக்கத்தையும் நெனைக்கறபோதே அடி வயத்தைக் குமட்டிண்டு வரது.
Ashok Krishna liked this
ஒரு பொருள் யாரோடதா இருந்தாலும் அதனோட அழகு பொதுவானதுதானே! அந்த அழகு சிதைகிறபோது அதை ரசிச்சவாளுக்கெல்லாம் வருத்தம் வரது...
Ashok Krishna liked this
கதை வேற, வாழ்க்கை வேற. கதையிலே அப்படி ஒரு பாத்திரத்துக்குக் கிடைக்கிற அனுதாபத்தை வாழ்க்கையிலே அந்தக் கதையை எழுதினவனாலேகூடக் காட்ட முடியுமாங்கறது சந்தேகம்தான்.
Ashok Krishna liked this
ஓ! காலம் எப்படி எப்படியெல்லாம் மாறிப்போறது! சில மனுஷா மட்டும் மாற மாட்டேங்கறாளே,
இந்தக் கொஞ்ச நாளிலேயே எனக்கு இவரும், இவருக்கு நானும் ரொம்பத் தேவைங்கற மாதிரி ஆயிடுத்து.
அப்படி என்னமோ குருட்டுத்தனமா யோசிச்சிண்டிருந்திருக்கேன். மனசிலே ஆயிரம் யோசனை வரும்; நாம்ப விரும்பறதும் வரும்; விரும்பாததும் வரும். நினைப்புக்கூட விவஸ்தை உண்டோ? இதெல்லாம் விவஸ்தை கெட்ட நினைப்பில்லாமல் வேற என்ன?
இவரைக் காதலிக்க முடியாத நானும், தன்னை விரும்பாதவாளைப் பலவந்தப்படுத்தத் தெரியாத இவரும் இவ்வளவு நெருக்கமா இருக்கறது எவ்வளவு செளகரியமான சங்கடம்'னு நினைச்சு நான் சந்தோஷமில்லாமல் சிரிக்கிறேன்.
எப்படியாவது ஒரு குழந்தை மாத்திரம் பெத்துண்டா என்ன? வயசு முப்பதாறதே!
குழந்தையும் செக்ஸும் சம்பந்தப்படாம இருந்தா எவ்வளவு நன்னா இருக்கும்?
பேசற விஷயத்திலே மனசு ஒட்டலேன்னா எனக்கு அந்தப் பாஷையே புரியமாட்டேங்கறது இப்பல்லாம்.
ஒரு குடும்ப சிநேகிதியா நீங்க என்னை மதிச்சான் நான் சந்தோஷப்படுவேன். இல்லையானா அதுக்காக நான் வருத்தப்படமாட்டேன்.