'இந்த ஒரு கங்காவை, இவள் வாழ்க்கையை மூளியாக்கி இவன் முகத்தில் கரி பூசியதன் மூலம் ஒரு பேதைப் பெண்ணை உம்முடைய பேய்ப் பசிக்கு இரையாகக் கொள்ளலாம் என்கிற உள்நோக்கம் ஒரு வேளை நிறைவேறலாமே தவிர, நீர் சொல்லுகிற அந்த தர்மங்களும், சாஸ்திரங்களும் ஒழுக்க நெறிகளும் இந்த ஒரு கங்காவினால் பாதுகாக்கப் பட்டுவிட்டது என்று உம்மால் நிரூபிக்க முடியுமா?