ஆம்பிளை முகங்கள். மீசையுள்ள முகங்கள்; மீசையே இல்லாம க்ஷவரம் பண்ணி க்ஷவரம் பண்ணி பச்சையாக் கறைப்பட்டுள்ள முகங்கள்; வட்டமான முகங்கள்; நீளமான முகங்கள்; கூலிங்கிளாஸ் போட்ட முகங்கள்; பளிச்னு தொடச்சுவெச்ச மாதிரி முகங்கள்; பரு நெறைஞ்ச, அம்மைத் தழும்பு உள்ள, எண்ணெய் வழியற அசடு வழியற, எப்பவுமே சிரிக்கிற மாதிரி இருக்கிற, பல்லு நீண்ட, 'உம்'னு இருக்கிற - எத்தனை விதமான முகங்கள்! ஒண்ணு மாதிரி இன்னொண்ணு கிடையாது.