More on this book
Community
Kindle Notes & Highlights
ஒரு நாவலின் முடிவைக் குறித்துத் தாங்கள் மிகவும் வருந்தி, துயருற்றுக் கண்ணீர் விட்டதாக எழுதுகின்ற வாசகர்களுக்கு நான் ஒன்று சொல்லுவேன்: 'உங்களைவிட அதிகமாக வருந்தி, துயருற்று, கண்ணீர் உகுத்துத்தான் அந்த ஆசிரியன் அந்த முடிவை எழுதி இருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.'
'மறைத்துக் கொண்டவர்களெல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள்; ஒப்புக்கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள்' என்பது எவ்வளவு அநீதி?
ஒரு பொருள் யாரோடதா இருந்தாலும் அதனோட அழகு பொதுவானதுதானே! அந்த அழகு சிதைகிறபோது அதை ரசிச்சவாளுக்கெல்லாம் வருத்தம் வரது...
இவளுக்கு நான் பள்ளிக்கூடப் பாடம்தான் சொல்லித் தந்தேன். இவ எனக்கு அருமையா வாழ்க்கைப் பாடம் சொல்லித் தந்துட்டாள்னு நெனச்சுக்கறேன்.