மிகப்பெரும்பாலான சாமானிய மக்கள் எதையும் கவனித்து உள்வாங்கிக்கொள்ளும் பழக்கத்தையே இழந்து விட்டிருந்தார்கள். நாங்கள் எங்கள் பிரசாரத்தைச் சொல்லச்சொல்ல அவர்களின் கண்கள் முற்றிலும் காலியாக இருக்கும். அந்தக் கண்களுக்கு அப்பால் ஒரு ஆன்மா இருப்பதே தெரியாது. அவர்கள் அறிந்தவை முழுக்க இளமையில் அவர்களுக்குள் சென்றவை மட்டுமே. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் பசித்து பசித்து உணவு உணவென்று அலைந்து வேறு எண்ணங்களே இல்லாமலாகிவிட்ட மனங்கள். அவற்றுக்கு சொற்களை அர்த்தமாக்கிக்கொள்ளவே பயிற்சி இல்லை.