More on this book
Community
Kindle Notes & Highlights
கைக்குழந்தையாக இருந்த காலம் முதல் ஒருநாளும் ஒரு நிமிடமும் என்னுடைய சாதியை நான் மறக்க எவரும் அனுமதித்ததில்லை.
Santhosh Guru and 1 other person liked this
கோமல் என்னை நோக்கித் திரும்பினார். புன்னகை செய்து ‘ஸாரி, நீங்க இருக்கறதை மறந்துட்டேன். இப்பல்லாம் மனசு அதுபாட்டுக்கு எங்கேயோ போய்ண்டே இருக்கு. ஒரு ஆர்டரே கெடையாது. ஒருமணிநேரம் கழிச்சு எதைப்பத்தி சிந்திச்சேன்னு பாத்தா ஒரு ட்ராக்கும் கெடையாது. எத்தனை ஆயிரம் பறவைகள் பறந்தாலும் வானத்திலே ஒரு தடம்கூட இல்லேன்னு ஒரு கவிதை இருக்கே, அதைமாதிரி...’
அகத்தின் வெளிவிளக்கம்தானே வெளியே.
எப்ப வேணுமானாலும் எதையும் விட்டுக்குடுக்க ரெடியான ஒரு வாழ்க்கை. எந்தப் பிடியிலயும் இறுக்கம் இல்லை. கையிலே ஒண்ணுமே நிக்காது. அதனால அவங்க ஒண்ணையுமே சாதிக்க முடியாது. ஆனா மிக முக்கியமான எதையெல்லாமோ அடைஞ்சிடறாங்க இல்லியா?
சீக்கியர்கள் அவங்க கடவுளை சத்ஸ்ரீ அகால்னு கும்பிடுறாங்க. அகாலம். அகால். என்ன ஒரு வார்த்தை. அகாலத்திலே யாராச்சும் காலமாக முடியுமா என்ன?
ஒவ்வொரு மனசும் ஒரு பிரபஞ்சம். அங்கே ஒவ்வொரு கடவுள். ஒவ்வொரு சொர்க்கமும் நரகமும். ஆனா பொதுவா எல்லாருமே மனுஷங்கதானே. சின்னப்பூச்சிங்க ஒரு கூழாங்கல்லிலே ஒண்டிக்கிட்டு நிக்கிற மாதிரி. இவ்ளவு அற்பமா இவ்ளவு கேவலமா வாழ விதிக்கப்பட்டிருந்தாலும், இவ்ளவு துக்கத்தையும் வலியையும் அனுபவிச்சு அர்த்தமில்லாம சாக விதிக்கப்பட்டிருந்தாலும் யாரோ மானுடம் மேலே இந்த மகத்தான மணிமுடிய சூட்டியிருக்காங்களே! தாங்க முடியலை. அந்த மகத்தான கௌரவத்தை குடுத்த அது எதிர்பார்க்கிறதத்தான் செய்றோமா?
‘எங்க இருக்கே? இருக்கியா? நீ இல்லாம இருந்தா நல்லா இருக்கும்னு வாழ்நாளெல்லாம் ஆசைப்பட்டேனே. நீ இல்லாத எடத்திலே எதுவும் நடக்கலாம். நீ இல்லேன்னா எல்லாத்தையும் நியாயப்படுத்திடலாம். நீ இல்லேன்னா எல்லாத்துக்கும் வேற அர்த்தம் வந்திடுது.
எனக்குப் பசிக்க ஆரம்பித்தது. ஆனால் எங்கள் வீட்டில் எப்போதுமே பசியைப்பற்றி எவரும் எதுவும் சொல்லும் வழக்கம் இல்லை.
மிகப்பெரும்பாலான சாமானிய மக்கள் எதையும் கவனித்து உள்வாங்கிக்கொள்ளும் பழக்கத்தையே இழந்து விட்டிருந்தார்கள். நாங்கள் எங்கள் பிரசாரத்தைச் சொல்லச்சொல்ல அவர்களின் கண்கள் முற்றிலும் காலியாக இருக்கும். அந்தக் கண்களுக்கு அப்பால் ஒரு ஆன்மா இருப்பதே தெரியாது. அவர்கள் அறிந்தவை முழுக்க இளமையில் அவர்களுக்குள் சென்றவை மட்டுமே. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் பசித்து பசித்து உணவு உணவென்று அலைந்து வேறு எண்ணங்களே இல்லாமலாகிவிட்ட மனங்கள். அவற்றுக்கு சொற்களை அர்த்தமாக்கிக்கொள்ளவே பயிற்சி இல்லை.
இத்தனை மக்களும் கூடவே வராமல் போனாலும் அவர் செல்வார். அவர் எப்போதுமே தனியாகத்தான் இருந்தார். அவருடன் அவர் கண்ணுக்குப் படும் துணையாக மனிதகுமாரன் இருந்திருக்கலாம்.
திரும்பிச் செல்ல நினைத்து அதே இடத்தில் நின்றேன். ஆனால் சாமர்வெல் ஒருமுறை கூட திரும்பிப் பார்க்கவில்லை. யார் வருவதும் வராததும் அவருக்கு ஒன்றே.
அறைக்குள் அது வரை இருந்த ஏதோ ஒன்று வெளியேறியது. முற்றிலும் புதிய ஒன்று உள்ளே வந்து சூழ்ந்தது. தூயது, தானிருக்கும் இடத்தை முழுக்க தன்னுடையது மட்டுமே ஆக்குவது.
சாவும் பிரிவும் ஒண்ணு. எல்லா பிரிவும் சின்னச்சின்ன சாவாக்குமே...’
‘படியுங்க, படிப்பிலே மட்டும் ஒரு வழிதான் எது படிச்சாலும் எங்கபோகணுமோ அங்க போயிடலாம்.
காந்தியிலே ரெண்டுகாந்தி உண்டு. ஒண்ணு சர்க்கார் காந்தி, இன்னொண்ணு தோட்டி காந்தி.
‘இன்றைய ஐரோப்பா உலகுக்கே அறிவையும் தொழில்நுட்பத்தையும் கொடுக்கும் ஞானபூமியாக இருக்கிறதென்றால் அது அன்னியர்களைக் கொண்டாடக் கற்றுக்கொண்டதுதான் காரணம். கிறுக்கர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த மானுட நாகரீகம்.