More on this book
Community
Kindle Notes & Highlights
அவர் கண்ணில் தாத்தாவின் கூனிக்கூடிய உடம்பு ஒரு சாணிக்குவியல்போல தோன்றியது. அதிலிருந்து அவிந்த வாடையும் புழுக்களும் எழுவதுபோல பிரமை ஏற்பட்டது.
Saravana Prabhu liked this
ஆனால் புனிதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறது. அதற்கு நம்பமுடியாத அளவுக்கு ஆற்றல் உண்டு.
நான் இப்பதான் கேறி வந்து பிடிச்சிருக்கேன். இந்தப்பிடி எனக்க பிடியில்லவே, எனக்கும் எனக்கு பின்னால வாற ஏழு தலைமுறைகளுக்கும் சேத்து உண்டான பிடியாக்கும். இப்பம் நான் இத விட்டா எட்டு தலைமுறைகளாக்கும் கீழ விழுகது, கேட்டேரா?
Saravana Prabhu liked this
அவர்கள் எப்போதுமே அவருக்கு ஒரு யானைபோகுமளவுக்கு இடம் விட்டார்கள்.
அது கன்யாகுமரி தேவி சுசீந்திரம் தாணுமாலயனை கல்யாணம்பண்ணிக்கணும்னு ஒத்தைக்காலிலே நின்னதோட தடம்னு நம்பறாங்க.
‘மனுஷன் உட்பட எல்லா ஜீவனுக்கும் இயற்கை குடுத்திருக்கிறது தனிமையத்தானே? மத்த எல்லாம் நாம குளிருக்கு போத்திக்கறது. கையிலே கிடைச்ச அத்தனையும் எடுத்து மேலே போட்டுக்கறோம். பொண்டாட்டி, புள்ளைங்க, நண்பர்கள், கட்சி, கழகம், கலை, இலக்கியம்... எல்லாமே. எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு தனிமையிலே போய் நிக்கணும்னு அன்னிக்கு தோணித்து.
Sudeeran Nair liked this
‘நல்ல ஆரோக்கியமிருக்கிறவங்க போறது கஷ்டம்தான். அவங்களுக்கு போய்ட்டு வரணும்னு இருக்கும். திரும்பி வரவேணாம்னு நினைச்சா எங்க வேணுமானாலும் போய்டலாம்...’
தன்னை சமூகத்தில் இருந்து வெளியேற்றிக்கொண்டவனே சமூகத்திற்கு புதிய வழியைக் காட்டமுடியும் என்று அந்நாடகம் காட்டியது. அந்த அன்னியர்கள் எந்த ஒரு சமூகத்திற்கும் பெரும் சொத்துக்கள்...’