கோயில்யானைகளை காட்டுக்குக் கொண்டுவந்து பராமரித்து திருப்பி அனுப்புவதற்குண்டான நடைமுறைகள், செலவுகள், பொறுப்பு பகிர்வுகள் எல்லாம் விரிவாக அதில் இருந்தன. வழக்கம்போல ஊசியிடைகூட பிழைகள் இல்லாத முழுமையான அறிக்கை. ‘‘பாரீஸ் ஜூவுக்கு நான் ஒரு ரிப்போர்ட் குடுத்தேன். அதிலே இருந்துதான் நான் இதை உண்டுபண்ணினேன்.” நான்