More on this book
Community
Kindle Notes & Highlights
ஒவ்வொரு சாதி வேலைக்காரர்களுக்கும் ஒரு தலைவன். அவன் அவனுடைய கோழிமுட்டை வட்டத்திற்குள் கொல்லவும் புதைக்கவும் அதிகாரம் கொண்ட மன்னன்.
நான் இப்பதான் கேறி வந்து பிடிச்சிருக்கேன். இந்தப்பிடி எனக்க பிடியில்லவே, எனக்கும் எனக்கு பின்னால வாற ஏழு தலைமுறைகளுக்கும் சேத்து உண்டான பிடியாக்கும். இப்பம் நான் இத விட்டா எட்டு தலைமுறைகளாக்கும் கீழ விழுகது, கேட்டேரா?
எண்ணங்கள்மேல் மணல்சரிந்து மூட ஆரம்பிக்க நான் என்னை இழப்பதன் கடைசிப் புல்நுனியில் நின்று மேலே தாவ உடலால் வெட்டவெளியைத் துழாவிக்கொண்டிருந்தபோது மீண்டும் அழைப்பு.
எழுந்து கொஞ்சம் நீர் குடிக்கவேண்டுமென எண்ணினேன். அந்த நினைப்புக்கும் உடலுக்கும் சம்பந்தமே இல்லாமலிருந்தது.
கடவுள் அவரோட நல்ல கிரியேட்டிவ் மூட்ல படைச்சிருக்கார்…”
என்ன ஒரு டிவைன் பீயிங். என்னிக்காவது தமிழ்நாட்டிலே யானை இல்லாம போனா அப்றம் நம்ம பண்பாட்டுக்கே என்ன அர்த்தம்? மொத்த சங்க இலக்கியத்தையும் தூக்கிப்போட்டு கொளுத்திர வேண்டியதுதான்.”
யூரோபியன் இதழ்களிலே இதைப்பத்தி பேசணும். அவன் சொன்னா இவன் கேப்பான். இப்பவும் அவந்தான் இவனோட மாஸ்டர்...”
கோயில்யானைகளை காட்டுக்குக் கொண்டுவந்து பராமரித்து திருப்பி அனுப்புவதற்குண்டான நடைமுறைகள், செலவுகள், பொறுப்பு பகிர்வுகள் எல்லாம் விரிவாக அதில் இருந்தன. வழக்கம்போல ஊசியிடைகூட பிழைகள் இல்லாத முழுமையான அறிக்கை. ‘‘பாரீஸ் ஜூவுக்கு நான் ஒரு ரிப்போர்ட் குடுத்தேன். அதிலே இருந்துதான் நான் இதை உண்டுபண்ணினேன்.” நான்