More on this book
Community
Kindle Notes & Highlights
‘ஆறிப்போச்சா?’ என்றார். ’கொஞ்சம்’ என்றேன். ‘எனக்கு ஆறிப்போய் குடிச்சாத்தான் நல்லாருக்கு. சூடா குடிச்சா சூடு மட்டும்தான் தெரியுது. இனிப்பும் மணமும் இல்லாம ஆயிடுது…பாய்ஞ்சு ஓடிட்டிருக்கிற பொண்ணை பாத்து ரசிக்கமுடியுமா?
Swetha vasu liked this
பயம்… அந்த பயம் எதுக்காகன்னு எப்பவாவது கவனிச்சா அதை தாண்டி போயிடலாம். பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும், அப்டியே உதுந்துடும்...
Swetha vasu liked this
இங்க உங்களுக்கு மேலே போக வழி இல்லை. இங்க இருக்கறச்ச எங்கியோ உங்களோடொத்தவங்க ஓட்டத்துல முந்திண்டிருக்கறதா தோணிண்டே இருக்கும்” என்று டாக்டர் கே தொடர்ந்தார். ‘‘அதான் ஓடுறீங்க. காட்டுக்கு மேலே உங்களுக்கு இருக்கற பொறுப்பை உதறிண்டு போறீங்க. நீ வேற மாதிரி இருப்பேன்னு நினைச்சேன். வெல்...”
Swetha vasu liked this
முபாரக் ஓட்டலில் சாப்பிட்டால்தான் திருவனந்தபுரம் வந்ததாகவே ஆகும் என நம்பும் அசைவப்பிரியர்கள் கேரளம் முழுக்க உண்டு. ஆனால் கெத்தேல் சாகிப் சோற்றுக்கடை வேறு ஒரு விஷயம், சொன்னால்தான் புரியும்.
Swetha vasu liked this
மௌனி சொல்றாப்ல அகத்தின் வெளிவிளக்கம்தானே வெளியே. பாழ்ங்கிற சொல் மேலே மௌனிக்கு அப்டி ஒரு பிரியம், கவனிச்சிருப்பேள். பாழ்னா அவரு வீண்ங்கிற அர்த்தத்திலே சொல்றதில்லை. புரிஞ்சுகிடமுடியாத பெரிய வெறுமையைத்தான் அப்டிச் சொல்றார். அவரோட பாதிக்கதையிலே அந்த அனுபவம்தான் இருக்கு.
Swetha vasu liked this
‘நல்ல ஆரோக்கியமிருக்கிறவங்க போறது கஷ்டம்தான். அவங்களுக்கு போய்ட்டு வரணும்னு இருக்கும். திரும்பி வரவேணாம்னு நினைச்சா எங்க வேணுமானாலும் போய்டலாம்...’
Swetha vasu liked this
கிளாத்தியின் குடலிலும் இரைப்பையிலும்தான் காலரா கிருமிகள் இருக்கின்றன என்று சாமர்வெல் சொன்னார். ஆடிமாசத்தில் கட்டுக்கடங்காமல் பெருகும் ஈக்களால் அவை பரவுகின்றன. கிளாத்தியை உண்ணக்கூடாது என்று கிராமம் கிராமமாகச் சொல்ல லண்டன் மிஷன் சர்ச்சுகளுக்கு செய்தி போயிற்று. கிறிஸ்தவர்களுக்கு கிளாத்தி தடைசெய்யப்பட்ட உணவு என்று சர்ச்சில் சொன்னார்கள். ஆனால் கிளாத்தியை உண்ணுவதிலிருந்து எவரையும் தடுக்க முடியவில்லை. அதி தீவிர கிறிஸ்தவர்களைத் தவிர பிறர் ரகசியமாகச் சாப்பிட்டார்கள். கிளாத்தியின் தோலையும் குடலையும் குழிதோண்டி புதையுங்கள் என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தோம். சாமர்வெல் அதற்காக சர்ச்சுகள் தோறும் சென்று
...more