More on this book
Kindle Notes & Highlights
இந்த பிளாஸ்டிக் ஸ்டூல் மீது ஒரு ஈ அமர்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறது. எழுதும்போது வண்ணத்துப்பூச்சி என்றுதான் எழுத வேண்டியிருக்கும்.
தையல் மிஷின் என ஒரு கவிதை எழுதியிருக்கிறார் பிரம்மராஜன். வழக்கம் போல் புரியவில்லை. போனில் கேட்டால் "female android" என விளக்கமளிக்கிறார்.
என் மகன் பகுத்தறிவுவாதியாகிவிடுவானோ என்கிற பயத்தில் தினமும் அவனுக்கான காம்ப்ளானில் ஒரு சிட்டிகை விபூதி கலக்குகிறேன்.
ஆதி ஜீவ பரிணாமக் குரங்கின் அவரோகண திரேக கந்த நீக்கி அடக்கம் துறந்து கிடைகொள்கிறது என்றால் பாடிஸ்ப்ரே தீர்ந்துவிட்டது என்று பொருள்.
காஷ்மீர் கச்சத்தீவு அருணாசலப் பிரதேசப் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, என் மேஜையின் இறையாண்மை தொடர்ந்து மீறப்படுகிறது. இந்த டம்ளரை யாரிங்கே வைத்தது?
இந்த ஆண்டிலும் தேதிகள் தவிர எதுவும் மாறப்போவதில்லை.
சாதி இரண்டொழிய வேறில்லை என்றார் பாரதி. பெண்கள் ஆதிக்க சாதியாக இருப்பது அவர் கண்ணுக்கு உறுத்தவில்லை போலும்.
ஒரு வசதிக்காக அன்றன்றைக்கான டயரி குறிப்புகளை முந்தைய நாளே எழுதி வைத்துவிடுகிறேன்.
எனக்குக் கவிதை புரிவதில்லை. எழுதுவதோடு சரி.
ஒரு இளம்பெண் எனது நாவல் ஒன்றின் மேலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளாள். நான் கேட்கிறேன், ஏனம்மா, உனக்கு என் புத்தகம்தான் கிடைத்ததா?
மனைவியின் பிறந்தநாளை மறந்து தொலைத்ததால் சண்டை. "மறப்பது நானாகவே இருந்தாலும் நினைவூட்டுவது நீயாக இரேன்" என ரொமாண்டிக்காகப் பேசியும் பயனில்லை.
Diarrhoea = கொல்லை நோய் #லபக்குதாஸ்
இதை யாராவது கவனித்தார்களா என்று தெரியவில்லை:- "தமிழில்" என்று சொல்வதைவிட அழகு தமிழில் "அழகு தமிழில்" என்று சொன்னால் அழகாக இருக்கிறது.
கேள்வி எழுப்பும் வரை பதில் தூங்கத்தான் செய்யும்.
நமக்கும் வாழ்க்கைக்குமான நாள்பட்ட பேச்சுவார்த்தைதான் வாழ்க்கை.
குக்கர் விசிலை எண்ணுவதற்கு எழுத்தாளன் எதற்கு?
சுயநலம் எவ்வளவு ஜாலியான விஷயம்! ஆனால் தியாகம் என்றா...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
இருபது ஆண்டுகளுக்குப் பின் யாரோ எழுதப்போகும் எனது வாழ்க்கை வரலாறுக்குள் இருந்தபடி வாழ்வது சிரமமாக இருக்கிறது.
பள்ளிப் பருவ குரூப் போட்டோ ஒன்று கிடைத்தது. அதில் நீண்ட நேரமாய் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன். சுயதேடல் இவ்வளவு கடினமா?
இலக்கியம் மண்டையிலிருந்து வரக் கூடாது, வாழ்க்கையிலிருந்து வர வேண்டும் என்பவர்கள், மண்டையும் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பகுதிதான் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.
தலைவியின் தோழிகளுடைய அழகை விவரித்துத் தலைவன் பாடுவது போல் எந்த நானூற்றிலாவது வந்திருப்பதுண்டா?
என்னைப் பார்க்க என் ஜாதிக்காரர்கள் சிலர் வந்துள்ளனர். வேறு யாருமில்லை, என் உறவினர்கள்தான்.
சில பெண்கள் ஐந்தரை அடிக்கு மேல் உயரமாக இருக்கிறார்கள். எதற்கு என்றுதான் தெரியவில்லை.
பூகம்பம் வந்தால் தெரிவதற்காக என் மேஜை மேல் ஒரு கண்ணாடி கிளாசில் தண்ண...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
நல்ல இசைக்கும் நல்ல மனைவிக்கும் தலையாட்டாதவன் மனிதனே அல்ல.
பாரதி போய்விட்டான். "காலருகே வாடா" மட்டும் காலனை மிதித்துக்கொண்டிருக்கிறது நிரந்தரமாய்.
நெடுநாள் பார்க்காத நண்பனிடம் எழுத்தாளனானதை சொன்னேன். "இன்னா எய்துவே?" என்றான். "இயற்கை எய்துவேன்" என்றேன், Death of the Authorஐ விளக்கி.
"சகதர்மிணி" என்பதைவிடப் "பழக்கதோஷிணி" என்பது பொருத்தமானதாய்த் தோன்றுகிறது.
பத்து வார்த்தைகள் பொடி வைத்து எழுதினால் அதில் நான்கிற்குத்தான் தும்முகிறார்கள்.
ஒப்பிட்டுத் திட்டப்படுவதற்கு வெறுமனே திட்டப்படுவது எவ்வளவோ பரவாயில்லை.
மகளிர் தினம் என்றால் மட்டும் ஆண்களுக்கென்ன விசேச மரியாதையா கிடைத்துவிடப்போகிறது? இன்றைக்கும் அதே மண்டகப்படிதான். #மார்ச்8
நல்லவனை இகழ்ந்து அழி, கெட்டவனைப் புகழ்ந்து அழி.
மனைவி என்னிடம் கொஞ்சம் சிரித்துப் பேசினாலும் காபி கேட்டுவிடுகிறேன்.
எனக்கு ஒரு மந்திரசக்தி வேண்டும். "வாய்ல என்ன கொழக்கட்டையா?" என மனைவியார் கேட்கையில் வாயில் நிஜமாகவே ஒரு கொழுக்கட்டை தோன்றிவிட வேண்டும்.
ஒரே வெறுப்பாக இருக்கிறது. யாராவது பத்து கோடி கொடுங்கள். எங்கேயாவது போய்விடுகிறேன்.
ஒரு நண்பரின் மகள் அப்படியே அவர் சாயலில் இருக்கிறாள். ஆணாதிக்கம் எவ்வளவு நுட்பமான வழிகளில் வெளிப்படுகிறது பாருங்கள்!
'ரவுடி'யை சிலர் 'இரவுடி' என்று எழுதுகிறார்களே, அதைப் படிக்கும் பெண்கள் தூங்கிவிட மாட்டார்களா?
மகன் ஐபேட், ஐபோன் என்று பழியாகக் கிடக்கிறான். "கொஞ்சமாவது டி.வி. பார்" என்று கெஞ்ச வேண்டியிருக்கிறது.
வெளியே கிளம்பும்போது "வர்றப்ப அரைக் கிலோ அரிசி வாங்கிட்டு வருவீங்களா?" என்று கேட்டால் எனக்கென்ன ஜோசியமா தெரியும்?
நண்பர் ஒருவர் சீன ஓவியத்திலிருந்து விண்வெளிப் பயணம் வரை எது பற்றிப் பேசினாலும் "எல்லாம் ஃப்ராடு பசங்க" என்றே முடிக்கிறார்.
ஃபேஸ்புக்கில் அறிந்த அதிர்ச்சித் தகவல்: சூரியனுக்கு மஞ்சள் நிறம் தரப் பயன்படுத்தப்படும் சாயத்தில் ஆபத்தான வேதிப்பொருட்கள் உள்ளனவாம்.
சிரித்து மாள வேண்டும்; பிறர் சிரிக்க மாண்டிடாதே.
கடவுள் நம்பிக்கை ஒரு பசித்த கிணறு. பூஜை, பரிகாரம் என்று அதற்குத் தீனி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
நம் மனைவிகள் நம்மை ஏன் சகித்துக்கொள்கிறார்கள்? நம்மைப் பிற கணவர்களோடு ஒப்பிடுவதால். நான் ஏன் நம் மனைவிகளை சகித்துக்கொள்கிறோம்? வேறு வழி?
'வயது 50 ஆகப்போகிறது. இனி நல்ல ஆடை அணிவதில் அர்த்தமில்லை. இந்தா இதை மாட்டிக்கொள்' என்பது போல் துணி வாங்கித் தருகிறார்கள் மாமனார்-மாமியார்.
டாக்டரிடமும் வக்கீலிடமும் "நான் உங்க வீட்ல தங்கறதால உங்களுக்கு சிரமம் இல்லையே?" என்று கேட்கும் விருந்தினரிடமும் உண்மையே பேச வேண்டும்.
What has been learnt is a handful of sand; what has not been learnt is global. - Poetess Avvaiyar #மொழியாக்கம்